போலீஸ் ஸ்டேசனிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! கல்வீசி தாக்கியதில் போலீஸ் காயம்! பரபரத்த தேனி
தேனி: தேனியில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன், 24 செல்போன்கள், கஞ்சா ஆயில் உட்பட ஏராளமான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிர்ச்சியாக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் போது பிடிக்க முயன்ற முதல் நிலை காவலர் மீது கல்வீசி தாக்கப்பட்டதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் தேனி சமதர்மபுரத்தில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, செல்போன்கள், வாகனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காவலர்கள் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றிருந்த நிலையில் காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் இரண்டு கொள்ளையர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
காவல்நிலையத்தில் கொள்ளை:
அப்போது அவ்வழியாக வந்த இரவு காவல் பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் முருகேசன் என்பவர் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து அவர்களை சோதித்த போது, அவர்களிடம் ஏர்கன், செல்போன்கள் என ஏராளமான பொருட்கள் இருந்ததால் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். அப்போது இரண்டு பேரும் அவரை தள்ளி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனையடுத்து கொள்ளையர்களை காவலர் பிடிக்க முயன்றுள்ளார்.
காவலர் மீது தாக்குதல்:
இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில், பின்னால் துரத்திச் சென்று பிடிக்க முயன்ற போது, இருவரும் சேர்ந்து முருகேசன் மீது கல் வீசி தாக்கியதில் முருகேசனின் தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் என்பவரிடம் முருகேசன் நடந்ததை கூறிய போது, இருவரும் சேர்ந்து துரத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார்.
கஞ்சா கொள்ளை:
இதனைத் தொடர்ந்து கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், அவன் பெயர் நிதீஷ் குமார் (23) என்பதும் பண்ணைப்புரம் வடக்குத் தெருவை சேர்ந்தவன் என்பதும், அவனுடன் சேர்ந்து கொள்ளையடித்த மற்றொருவன் கோம்பையைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து 24 செல்போன்கள், ஒரு ஏர்கன், இரண்டு கேமராக்கள், மைக் கேமரா ஒன்று, ஒரு பைனாக்குலர், வெள்ளை பவுடர், கஞ்சா ஆயில் 650 ML, 50 கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்தது தெரியவந்தது.
காவலருக்கு சிகிச்சை:
இதனைத் தொடர்ந்து உதயகுமார் தப்பி ஓடிய நிலையில், நிதிஷ்குமாரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த முருகேசன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிடிபட்ட குற்றவாளி நிதீஷ்குமார் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேனியில் பரபரப்பு:
காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்ததுடன், போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
நாட்டின் உயர்ந்த கீர்த்தி சக்கரா விருது வென்ற தேனி ராணுவ வீரர்.. நெகிழ வைத்த ஊர் மக்கள் -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications