தேர்தலில் அரை சதம் அடித்த தேனியின் தோனி.. ஓ.பி.ஆருக்கு கூடும் மவுசு.. புதிய பவர் சென்டர் ஆகிறாரா?
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனியில் அதிமுக பெற்ற வெற்றி அந்த கட்சிக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
தேனி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனியில் அதிமுக பெற்ற வெற்றி அந்த கட்சிக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இதன் மூலம் கட்சிக்குள் எம்பி ஓ. பி ரவீந்திரநாத்தின் புகழ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ளது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 7 மாவட்டங்களின் திமுக சேர்மன் பதவிகளை கைப்பற்றுகிறது ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5090 இடங்களில் திமுக 2273 , அதிமுக 2071, மற்றவை - 509 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 263, அதிமுக 235, மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தேனி எப்படி
தேனியில் மொத்தமாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, நாமக்கல், தேனி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி சேர்மன் பதவிகளை கைப்பற்றியுள்ளது அதிமுக கூட்டணி. தேனியின் வெற்றி அதிமுகவிற்கு உற்சாகத்தை தந்துள்ளது.

எத்தனை கவுன்சிலர்
தேனியில் உள்ள 98 ஒன்றிய கவுன்சிலர் தொகுதிகளில் அதிமுக 50 இடங்களை அடித்து தூக்கி வென்றுள்ளது. தேனியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்றுள்ளது. திமுக 41 இடங்களை வென்றுள்ளது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஒன்றியத்தில் மடடும் அதிமுகவை திமுக முந்தியுள்ளது.

ஆதிக்கம்
மற்றபடி தேனி முழுக்க அதிமுகதான் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. தமிழகத்திலேயே அதிமுகவிற்கு அதிக அளவில் வாக்குகள் கிடைத்த மாவட்டங்களில் ஒன்றாக தேனி உருவெடுத்துள்ளது. இதன் மூலம் அதிமுகவில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.

லோக்சபா தேர்தல்
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கட்சி தேனியில் மட்டும்தான் வென்றது. தமிழகம் முழுக்க அதிமுக கூட்டணி போட்டியிட்டாலும், தேனியில் மட்டும்தான் ஓ.பிரவீந்திரநாத் வெல்ல முடிந்தது. அப்போதே அதிமுகவில் கொஞ்சம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கை ஓங்கியது.

மீண்டும் வருகிறார்
தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் தேனியில் அதிமுக சிறப்பாக களமாடி உள்ளது. இதனால் கட்சிக்குள் மீண்டும் ஓ .பி.எஸ் லைம் லைட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள். மிக முக்கியமாக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் நியமித்த நிர்வாகிகள் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். லோக்சபா தேர்தலில் ஸ்டைலில் ஓ.பி.ஆர் உள்ளாட்சி தேர்தலிலும் சிறப்பாக செயலாற்றி உள்ளார்.

பவர் சென்டர்
இதனால் அதிமுக புதிய பவர் சென்டராக ஓ.பி.ஆர் உருவெடுக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே எம்பியாக இருப்பதால் டெல்லியில் ஓ. பி ரவீந்திரநாத் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. டெல்லியில் அதிமுகவின் ஒரே முகமாக இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications