தமிழக வண்டிக்கு ஒரு டயருக்கு 5000 அபராதம்.. வெளிமாநில வண்டியை பார்த்தாலே.. கேரளாவில் குமுறிய இளைஞர்
தேனி: வெளிமாநிலங்களில் தமிழக வாகனங்களை விரட்டி பிடித்து கடுமையாக அபராதம் விதிக்கும் போக்கு இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் தமிழக காருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேள்வி கேட்டு இளைஞர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பதிவெண் கொண்ட கார் மற்றும் லாரிகளுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அதிக அபாராதம் விதிக்கப்படும் சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக தமிழக வாகனங்களை பார்க்கும் கேரள போலீசார், கண்டபடி அபராதம் விதிப்பதாக குமுறுகிறார்கள் தமிழக வாகன ஓட்டிகள்..

கேரளாவில் உள்ள ஒரு பகுதியில் தமிழக வாகன ஓட்டிக்கு அபராதம் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதேநேரம் கேரள வண்டியில் விதிமீறல்கள் இருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்,
அந்த வீடியோவில் வாகன ஓட்டி கூறுகையில், எங்கள் வண்டி கேரளாவிற்குள் ஒரு வேலைக்காக போய் கொண்டிருந்தது... கோவிந்தாபுரம் தாண்டி, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் போய்கொண்டிருந்த போது, கேரளாவின் மோட்டார் வாகன சோதனை போலீஸ் வண்டி வந்து பிடிக்கிறது.. என்னுடைய வண்டி நம்பர் பிளேட் வந்து ஆர்டிஓ ரூல்ஸ்படி, ஐஎன்டி நம்பர் பிளேட் போட்டிருக்கிறேன்..
இரண்டாவது வாகனத்தின் முன்பக்கம் நான் போட்டிருக்கும் வீல் அலாய் வீல் ஆகும். இந்த அலாய் வீல் போடக்கூடாதாம்.. சரி பரவாயில்லை சார்... என்ன ஃபைன் என்று சொல்லுங்கள்.. நாங்கள் கட்டிக்கொள்கிறோம் என்று சொன்னோம்.. அவர்கள் ஒரு டயருக்கு 5000 ரூபாய் என அபராதம் விதித்துள்ளார்கள்.. அதேபோல் நம்பர் பிளேட்டுக்கும் அபராதம் விதித்துள்ளார்கள்.
ஆனால் நான் வந்த போது, கேரளா வண்டி ஒன்று வந்தது. அந்த வண்டியிலும் அலாய் வீல் தான் முழுமையாக போட்டிருந்தார்கள்.. 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த வாகனத்தில் முன்னாடி லைட் செட் செய்திருக்கிறார்கள், சன் ரூப் ஒட்டியிருக்கிறார்கள். அந்த வண்டியை பிடிக்காமல் நம்முடைய தமிழ்நாட்டு வண்டியை பிடித்து அபராதம் விதித்துள்ளார்கள். அந்த கேரள வண்டிக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி விட்டார்கள்.
உள்ளூர் மக்கள் எல்லாரும் இந்த காட்சியை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.. எங்களுக்கு 8000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்துள்ளார்கள்..இந்த அபராதத்தை நான் கட்டிக்கொள்வேன்.. ஆனால் அதேநேரம் கேரளா வண்டியை விட்டதற்கான காரணம் என்ன என்பதை கூற வேண்டும். இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமா?" என்று ஆவேசத்துடன் இளைஞைர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இதனிடையே கேரள போலீசாரோ, வண்டியை வாங்கியபடிதான் இருக்க வேண்டும். இஷ்டத்திற்கு ஆல்ட்ரேசன் செய்யக்கூடாது என்றும் அப்படி வண்டியை மாற்றினால் அபராதம் விதிப்பது வழக்கமானது தான் என்று கூறுகிறார்கள்.
-
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications