மறப்போம், மன்னிப்போம் என சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்- தங்கதமிழ்ச்செல்வன்
தேனி: மறப்போம், மன்னிப்போம் என சென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள் என அமமுகவின் தேனி தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
தேனியில் அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆட்சியை கலைக்க திமுக எங்களுக்கு உதவ வேண்டும்.
ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தூத்துக்குடியில் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கூட்டு
அப்போது அவர் கூறுகையில் தங்கதமிழ்ச் செல்வன் கூறியதன் மூலம் திமுக -அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் தங்கதமிழ்ச் செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜெயலலிதா
அப்போது அவர் கூறுகையில் அன்று ஜானகி ஆட்சியைக் கலைத்ததற்கு காரணமே துரோக ஆட்சியை நீக்கிவிட்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை கொண்டு வரத்தான். அதே பாணியில்தான் தற்போது எடப்பாடி ஆட்சியை கலைத்துவிட்டு டிடிவி தினகரன் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்.

அதிமுக ஆட்சி
22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெற்றுவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராகதான் நாங்கள் வாக்களிப்போம். அதே போல் திமுகவும் அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என்றுதானே நினைக்கும்.

திமுகவும் அமமுகவும் கூட்டணி
அது போல் முஸ்லீம் லீக் கட்சியும் தமிமுன் அன்சாரியும் அதிமுகவுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில்தான் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று தெரிவித்தேன். அதற்காக திமுகவும் அமமுகவும் கூட்டணி என கூறுவதா.

அண்ணா வழியில்
எப்படியாவது எடப்பாடி ஆட்சியை கலைக்க வேண்டும். திமுக எங்களுக்கும் எதிரிதான். மறப்போம், மன்னிப்போம் என அண்ணா வழியில் சென்றால் மக்கள் எங்களை மறந்துவிடுவார்கள் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications