ஓபிஎஸ் எங்க போயிட்டாரு.. கேரளாவுக்கு ஆயில் மசாஜ் செய்ய போயிருக்காரு.. போடியில் தங்கம் விமர்சனம்
தேனி: போடி சட்டசபைத் தொகுதியில் வென்ற ஓபிஎஸ் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார் என முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் போடியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை போடியில் ரூ 100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு- கொட்டக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ பெரியசாமி ஆகியோர் போடிக்கு வருகை தருகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் குடிநீர் பிரச்சினையில் தன்னிறைவு அடையும்.
போடி சட்டசபை உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர் வருவதும் வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். போடி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பிறகு அவர் எத்தனை முறை தொகுதிக்கு போய் மக்களை சந்தித்துள்ளார்? அவர் போவதே இல்லை.
ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்று போன நான் அடிக்கடி தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறேன். அவர்கள் சொல்லும் குறைகளை அமைச்சர்களுக்கு கூறுவேன். மேலும் அந்த தொகுதியில் தமிழக அரசு திட்டங்கள் சரியாக மக்களை சென்றடைகிறதா என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓபிஎஸ் போடிக்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தற்போது அவர் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார். கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ 500கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கும் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.
அது போல் என்றாவது ஓபிஎஸ் தொகுதியில் இருந்து பார்த்திருக்கிறார்களா. ஆனால் தோற்ற நான் கடந்த 2 வருஷமாக இங்கு வந்து செல்கிறேன். அது போல் தேனி மாவட்டத்திற்கு உணவு பூங்கா வர போகிறது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ என பதவிகளை வகித்த ஓபிஎஸ் ஏன் இதுவரை எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை என தங்கதமிழ்ச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அவர் தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து தினகரன் அமமுகவை தொடங்கியதும் அங்கு இணைந்தார். பின்னர் திமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் ஓபிஎஸ்ஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஓபிஎஸ்ஸின் தாய் மரணத்தின் போது ஓபிஎஸ்ஸை ஆரத்தழுவி ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications