தேனியில் நுழைந்த டிப் டாப் ஆபிசர்.. ஆண்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஒரே பரபரப்பு.. கிளம்பி வந்த கலெக்டர்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் சமீபத்தில் வணிகர்கள் சிலரை, மர்மநபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறியதோடு, அவர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இந்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எனக் கூறி போலி நபர்கள் வந்தால் புகார் செய்யலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.
தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருத்தல், உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காதவண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து, காட்சிப்படுத்துதல் வேண்டும். உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட அலுமினிய காகிதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண், 04546-252549 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம். அல்லது தமிழக உணவு பாதுகாப்புத்துறையின் செயலி, https://foodsafety.tn.gov.in என்ற இணையதளத்திலும் புகார் செய்யலாம்.
மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என போலியான நபர்கள் யாரேனும் தொடர்பு கொண்டாலோ அல்லது நேரடியாக வந்தாலோ போலீஸ் துறையினர் அல்லது உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்று உள்ளனர்.
அதன்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலி நபர்கள் குறித்த புகார்களை, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லிங்கம் (தேனி) - 9944674560, இளங்கோவன் (ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை) - 9003316144, செந்தில்ராஜ்குமார் (போடி) - 9003735560, சிரஞ்சிவி (சின்னமனூர்) - 9942238465, ரமேஷ் (உத்தமபாளையம், கம்பம்) - 9865429827, கண்ணன் (பெரியகுளம்) - 8508888700 ஆகியோரை அவர்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications