புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் புதிதாக யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. தேனி கலெக்டர் தகவல்
தேனி: திருநங்கைகளின் கல்விக்கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசால் உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகள், திருநம்பிகள் போன்ற மூன்றாம் பாலினத்தவர்கள் எந்த வகையான பள்ளிகளில் படித்து இருந்தாலும் உயர்கல்வி பயிலும் போது அவர்களுக்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் என்று தேனிமாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கூறியுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன் பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுவரை திருநங்கைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே கல்லூரி படிப்பில் ரூ.1000 உதவித்தொகை பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
விதிமுறை தளர்வு
இப்போது இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு அண்மையில் தளர்த்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என எந்த வழியில் பயின்றிருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது என்றும் திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம் பெற முடியும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
திருநங்கைகள் பயன்பெறலாம்
இதுபற்றி தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "திருநங்கைகளின் கல்விக்கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசால் உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகள், திருநம்பிகள் போன்ற மூன்றாம் பாலினத்தவர்கள் எந்த வகையான பள்ளிகளில் படித்து இருந்தாலும் உயர்கல்வி பயிலும் போது அவர்களுக்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக, இத்திட்டங்களில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வழிக்கல்வி தேவையில்லை
அதன்படி, இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்டவர்களுக்கு அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்ற விதியை முற்றிலும் தளர்வு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனியில் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
எனவே, தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி ஆகிய மூன்றாம் பாலினத்தவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழ்நாடு திருநங்கைகள் வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாங்கள் படிக்கும் கல்லூரியில் சான்றாக காண்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications