ஆணழகன் நல்லதம்பி செய்த கெட்ட காரியத்தை பாருங்க.. சஸ்பெண்ட் செய்து அதிரடி.. ஏட்டய்யாவுக்கு இது தேவையா
சென்னையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற ஏட்டு நல்ல தம்பி என்பவர், தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய கஞ்சாவை விற்பனை செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
தேனி: சென்னையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற ஏட்டு நல்ல தம்பி என்பவர், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய கஞ்சாவை விற்பனை செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்ததாக புகார் வந்ததால் அவரை பணியிட நீக்கம் செய்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பார் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி குமுளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக கடந்த ஆண்டு ஜனவரி முதல் பணிபுரிந்து வந்தவர் நல்ல தம்பி. குமுளி காவல் நிலைய சார்பு ஆய்வாளருடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பிருந்து கூடலுார் வடக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
அங்கு நல்லதம்பி, குமுளி, கூடலூர் வடக்கு, தெற்கு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் கஞ்சா வழக்குகள் தொடர்பான கோர்ட்டு அலுவலக பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தேனி மாவட்டம், கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் எம். பிச்சைப்பாண்டியன், உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் மதுக்குமாரியிடம் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், தேனி மாவட்டம் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் அயலகப் பணியாக மதுரை சிறப்பு நீதிமன்றம், குடிமைப் பொருள் அமா்வு நீதிமன்றப் பணிக்காக காவலா் நல்லதம்பி நியமிக்கப்பட்டிருந்தார்.

கஞ்சா விற்பனை
இவரிடம் கஞ்சா வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட 250 கிராம் கஞ்சாவை, அவரது தோட்டத்தில் வேலை செய்யும் கணேசனிடம் விற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவரிடமிருந்து, மற்றொரு நல்லதம்பி, மணிகண்டன், சரவணக்குமார் ஆகியோரிடம் அந்த கஞ்சா கைமாற்றப்பட்டு விற்கப்பட்டுள்ளது. எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ஆய்வாளா் எம். பிச்சைப்பாண்டியன் கூறியிருந்தார்.

என்ன நடந்தது
இந்த புகாரையடுத்து உத்தமபாளையம் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா் மதுக்குமாரி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து கம்பம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி போலீசார் பறிமுதல் செய்த கஞ்சாவை நல்லதம்பி மதுரை கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக எடுத்துச்சென்றாராம்.

250 கிராம் விற்பனை
அப்போது அந்த கஞ்சாவில் 250 கிராம் அளவு எடுத்து சின்னமனூரை சேர்ந்த தோட்ட தொழிலாளியான கணேசன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர், சின்னஓவுலாபுரம் இந்திராகாலனியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மற்றொரு நல்லதம்பியிடம் கஞ்சாவை கொடுத்ததாக கூறப்படுகிறது. மற்றொரு நல்லதம்பி, அந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எரசக்கநாயக்கனூர் பசும்பொன் தேவர் நகரை சேர்ந்த மணிகண்டனை அணுகியுள்ளார். மணிகண்டன், அதே ஊரை சேர்ந்த சரவணகுமாரிடம் கஞ்சாவை விற்றாராம்.

போலீஸ் மீது வழக்கு
இவ்வாறு கஞ்சா பொட்டலங்கள் அடுத்தத்து கைமாறி விற்பனை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்றதாக போலீஸ் ஏட்டு நல்லதம்பி, கணேசன், மற்றொரு நல்லதம்பி, மணிகண்டன், சரவணக்குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே போலீஸ் ஏட்டு நல்லதம்பி கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தததாக தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

தேனியில் பரபரப்பு
இதைத்தொடர்ந்து போலீஸ் துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனைக்கு துணை போனதாக நல்லதம்பியை பணியிடை நீக்கம் செய்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏட்டு நல்லதம்பி, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்று பரிசு வென்றவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய கஞ்சாவை போலீஸ்காரரே விற்பனை செய்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications