இனிக்க இனிக்க பேசிய தேனி பெண்.. தடுமாறி விழுந்த நபர்.. கடைசியில உத்தமபாளையம் கோர்ட் வாசலில் ஒரே பரபர
தேனி: கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது பிடிஆர் காலனி.. இங்கு வசித்து வருபவர் பிரசாந்த்.. இவருக்கு 34 வயதாகிறது.. இவர், வட்டிக்கு பணம் விடும், பைனான்ஸ் தொழிலை செய்து வருகிறார்.. இதனால் வட்டி பணத்தை தினமும் வசூலிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்.

வட்டி வசூல்: அப்படி வசூலுக்கு செல்லும்போதுதான், அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு நாளடைவில் தவறான உறவில் போய் முடிந்துள்ளது.. இவர்களது நெருக்கமான உறவு, ஒருநாள் அனீஸுக்கு தெரிந்துவிட்டது. எனவே பிரசாந்தை கண்டித்துள்ளார்... அதேபோல, மனைவியையும் கண்டித்து, அறிவுரை சொல்லி உள்ளார்.
ஆனால், 2 பேருமே அனீஸ் பேச்சை மதிக்காமல், கள்ள உறவை தொடர்ந்துள்ளார்கள்.. இதனால் மீண்டும் அனீசுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. இந்த விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வந்துள்ளது. ஒருகட்டத்தில், கள்ளக்காதலை கைவிட முடியாது என்று சொல்லி பிரசாந்த்துடனேயே அனீஸ் மனைவி சென்றுவிடடார். இதனால், பிரசாத் மீது அனீஸுக்கு கோபம் அதிகரித்தது. அவரை தீர்த்து கட்டுவதற்காக சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார்.
உத்தமபாளையம்: இந்நிலையில், இன்று காலையில் உத்தமபாளையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு பிரசாந்த், தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.. முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு சென்ற அனீஸ், தன்னுடைய மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு மறுபடியும் சொன்னார்.. ஆனால், அப்போதும் பிரசாந்த் கேட்காமல், அனீஸிடம் தகராறு செய்தார்.. இதனால், இருவருக்குமே அங்கேயே மோதல் ஏற்பட்டுள்ளது.
அனீஸ் ஓயாமல் தன்னை கண்டிப்பது பிடிக்காமல், ஆத்திரமடைந்த பிரசாந்த், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அனீஸை சரமாரியாக வெட்டி விட்டார்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அனீஸ் , வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பி ஓட ஆரம்பித்தார்.. ஆனால், கொலைவெறியுடன் அரிவாளுடன் பின்னாடியே துரத்திக் கொண்டு ஓடினார் பிரசாந்த்..

அரிவாள் வெட்டு: உடம்பெல்லாம் ரத்தம் வழிய, அருகிலிருந்த லாட்ஜுக்குள் தப்பித்து ஓடினார் பிரசாந்த். அப்போதும் அவரை விடாத அனீஸ், அவரை ஓட, ஓட துரத்தி சென்று, அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொன்றுவிட்டார்.
காலையிலேயே பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், அதுவும் நீதிமன்றம் அருகிலேயே இந்த கொடூர கொலை நடந்துள்ளது.. இதைப்பார்த்து பொதுமக்கள் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள்.. தகவலறிந்து உத்தமபாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.. ஆனால், அதற்குள் பிரசாந்த் தலைமறைவாகிவிட்டார்.. இதையடுத்து, அனீஸ் சடலத்தை கைப்பற்றி தேனி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து, பிரசாந்த்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விசாரணை: கொலை செய்யப்பட்ட அனீஸ் மீது, திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாம்.. பட்ட பகலில் கோர்ட்டு வளாகம் அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications