மீனாட்சிபுரம் மிரட்டுதே.. "தூண்டிலில் பெண்".. பங்களாவுக்குள் நுழைந்த தேனி போலீஸ்.. கிட்ட பார்த்தால்?
தேனி: தேனி மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியலயாம்.. ஒரே மர்மமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்றும் உறுதியாக தெரியவில்லை.
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி என்ற ஊராட்சி உள்ளது.. இந்த ஊராட்சி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மொத்தம் 7 ஊராட்சி மன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊஞ்சாம்பட்டியில் இருந்து விசித்திரமான புகார் ஒன்று தேனி போலீசுக்கு சென்றுள்ளது.. இந்த ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 21 வயதாகிறது.. எம்பிபிஎஸ் மருத்துவ படித்து வருகிறார். போடி - மீனாட்சிபுரம் சாலையில் ஒரு பங்களா இருக்கிறதாம்.. இந்த பங்களாவுக்கு, தன்னுடைய தோழியை சந்திக்க அடிக்கடி சென்று வந்துள்ளதாக தெரிகிறது.
யார் அந்த தோழி: ஆனால், இந்த பங்களாவுக்குள் சென்றுவிட்டால், அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடுமாம்.. யாராலுமே அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியாது என்கிறார்கள் இளம்பெண்ணின் பெற்றோர்.. இத்தனைக்கும் செல்போன் டவர் அந்த பகுதியில் ஏராளமாகவே இருக்கிறது.. அதேபோல, அந்த பங்களாவுக்குள் நிறைய வேட்டை நாய்கள் வளர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.. வெளி ஆட்கள் யாருமே உள்ளே செல்ல முடிவதில்லையாம்.
விசாரணை: இதையெல்லாம் பாதிக்கப்பட்ட பெற்றோர், தேனி எஸ்பியிடம் வந்து புகாராக சொல்லியுள்ளனர்.. இதையடுத்து, மாவட்ட எஸ்பியின் உத்தரவின்படி, தேனி மகளிர் போலீஸ் + போடி போலீசார் இரு தரப்புமே இணைந்து, சில நாட்களுக்கு முன்பு, அந்த பங்களாவில் விசாரிக்க ஜீப்பில் சென்றிருக்கிறார்கள்..
ஆனால், வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டிருந்ததால், உள்ளே போலீசாரால் செல்ல முடியாமல் திரும்பிவிட்டனர்.. பிறகு மறுபடியும் கடந்த 8ம் தேதி மறுபடியும் போலீஸ் ஜீப்பில் சென்றிருக்கிறார்கள்.. ஆனால், பங்களாவில் இருந்து, இன்ஸ்பெக்டருக்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது.. வேறு யாரும் உள்ளே வரக்கூடாது என்று மிரட்டினார்களாம்.. பிறகு, பெண்ணை தேடி வந்திருப்பதாக சொல்லவும், அந்த பெண்ணை மட்டும் போலீசாருடன் அனுப்பிவைத்திருக்கிறார்கள்..
மர்ம பங்களா: இப்போதைக்கு அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண், தேனி மகளிர் போலீசாரின் பாதுகாப்பில் உள்ள நிலையில், அந்த பங்களா குறித்த உண்மையை போலீசார் கண்டறிய போவதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த செய்தி முழுவதும் உண்மைதானா? அல்லது புரளியா? அல்லது யாராவது வேண்டுமென்றே இப்படியான கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார்களா? தேவையில்லாமல் பரபரப்புக்காக செய்தியை கசிய விட்டுள்ளார்களா? என்று பல சந்தேகங்கள் எழுகின்றன.. அதேபோல, போலீசாரை யாராவது தனிநபர் மிரட்ட முடியுமா? இதையும் நம்பமுடியவில்லை..
ஒரு சில மீடியாக்களில் இந்த செய்தி வெளியாகி உள்ள நிலையில், காவல்துறை மட்டுமே இந்த விஷயத்தில் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவருவார்கள் என்று நம்பப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications