தேனியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு.. கரைப்புரண்டு ஓடிய வெள்ளம்! 500 வீடுகளை நீர் சூழ்ந்ததால் அச்சம்
தேனி: நேற்றிரவு தேனி, இடுக்கி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தேனியில் வெள்ளம் கரைப்புரண்டு ஒடுகிறது. சுமார் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக முல்லை பெரியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. எனவே அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. கனமழை மற்றும் முல்லை பெரியார் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் காரணமாக தேனியில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

முல்லை பெரியார் அணைக்கு வினாடிக்கு 17,000 கன அடி நீர் வந்துக்கொண்டிருந்த நிலையில், அணையிலிருந்த 1,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்படும் நீரின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிகப்பட்டிருக்கும் நிலையில், தேனி வீரபாண்டி ஆற்றில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 2005ம் ஆண்டுதான் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு தற்போதுதான் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகள் கழித்து தேனியில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்திருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பாான இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
"பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் மக்கள் பாதிப்பு அடையாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன என்பதைக் கண்காணித்து அதற்கு நிவாரணம் காண்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் மாநில அரசின் தலையாய கடமைகள் ஆகும். வடகிழக்கு பருவமழை என்பது தமிழ்நாட்டில் அதிகம் பெய்யக்கூடிய ஒன்று என்பது நன்கு தெரிந்திருந்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்காததன் காரணமாக நேற்று பெய்த அதிகன மழையில் தேனி மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நிலவுகின்ற ஒன்று என்பதும், இந்தக் காலகட்டத்தில் பல கட்டங்களாக மழைப் பொழிவு இருக்கும் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற அதிகனமழை தேனி மாவட்டத்தில் பெய்துள்ளது. கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி முடிவடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் இந்த மழையால் சேதமடைந்துள்ளன. கம்பம் - கருவிபட்டி சாலையில் முல்லைப் பெரியாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டள்ளதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டாம் கால்வாய், ஏகலூத்து ஓடைப் பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக கம்பம் மெட்டு காலனியில் உள்ள குடியிருப்புகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர். கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தேமடைந்துள்ளன. உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் அருகே ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், கூடலூரில் தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதாகவும், சிறுபுனல் மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்ததன் காரணமாக தண்ணீர் உள்ளே புகுந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோழிகள், நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகி உள்ளன. மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நிவாரண நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு அதிகாரிகளை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, அந்த மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும்; சேதமடைந்த பயிர்கள், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத்தியிருக்கிறார்.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications