தேனி பெண்ணுடன் 10 நாளில் நடக்க இருந்த திருமணம் .. மதுரையில் இருந்து மணமகன் அனுப்பிய கடைசி மெசேஜ்
தேனி: தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி துளசிதேவி தம்பதியின் மகன் யோகனாசந்திற்கு 32 வயது ஆகிறது. மெக்கானிக்கல் என்ஜினியரான மோக்சானந்த் மதுரை வள்ளுவர் காலனி, வாசுகி நகரில் தங்கி, போட்டோகிராபிக் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பெண்ணுடன் 10 நாளில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு கடைசி மெசேஜ் அனுப்பி உள்ளார். அதன்பிறகு என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
திருமணம் பிடிக்கவில்லை என்றால், வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மணமகள் அல்லது மணமகன் யாராக இருந்தாலும் எதையும் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. ஏனெனில் திடீரென ஒருவர் செய்யும் தவறு, அவரது வாழ்க்கை துணையாக வரவேண்டியவரை கடுமையாக பாதிக்கும். தேனி மாவட்டத்தை சேர்ந்த என்ஜினியர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

தேனி மாவட்டம் கூடலூர் எல்லைத்தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, துளசிதேவி தம்பதிக்கு யோகனாந்த், மோக்சானந்த் (32) என்ற 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் யோகனாந்துக்கு திருமணமாகி விட்டது. மோக்சானந்த், மெக்கானிக்கல் என்ஜினீரியங் முடித்துவிட்டு மதுரை வள்ளுவர் காலனி, வாசுகி நகரில் தங்கி, போட்டோகிராபிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் மோக்சானந்துக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கம்பத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மோக்சானந்த் அந்த மணப்பெண்ணின் செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதில், 'எல்லோரும் கேம் ஆடுறாங்க, நீ என்னை திருமணம் செய்தால் சந்தோஷமாக இருக்கமாட்டாய், எனக்கு வாழ பிடிக்கவில்லை. சாகும் எண்ணம் வருகிறது. தூக்குப்போட்டு சாக போகிறேன், என்னை தனியா விடுங்க' என கூறியிருக்கிறார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண் இதுகுறித்து அவர்களின் உறவினர்களிடம் கூறினார். இதனை தொடர்ந்து துளசிதேவி உள்ளிட்டோர், தேனியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து பார்த்துள்ளனர்., மோக்சானந்த் தங்கி இருந்த வீடு பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மோக்சானந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தல்லாகுளம் போலீசார் வந்தனர். மோக்சானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் உயிரைவிட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
"மாமா உன் பொண்ண கொடு..அட ஆமா சொல்லிபுடு" இனி செல்லாது! சொந்தத்துக்குள் திருமணத்திற்கு ஸ்வீடன் தடை! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications