போலி நகை விற்பனை பின்னணியில் தேனி பெண்? பெங்களூர் வியாபாரி விவகாரத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது
தேனி: கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலா பகுதியை சேர்ந்தவர் திலீப் என்பவரும் அவருடைய அக்கா மகன் கலுவாவும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் தங்கியிருந்து கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். கடந்த 15-ந்தேதி அவர்களை தேனி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சிலர் காரில் கடத்திச் சென்றனர். இதில் திலீப்புக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் விவகாரத்தில் மிகப்பெரிய உண்மைகள் வெளிவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலா பகுதியை சேர்ந்தவர் திலீப் (வயது 44). இவரும், அவருடைய அக்கா மகன் கலுவாவும், ஆண்டிப்பட்டி பகுதியில் தங்கியிருந்து கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். கடந்த 15-ந்தேதி அவர்களை தேனி புதிய பஸ் நிலையத்தில் வைத்து சிலர் காரில் கடத்திச் சென்றனர்.

இருவரையும் அவர்கள் தாக்கினர். அதில், திலீப் உயிரிழந்தார். கலுவாவை மட்டும் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திலீப் உடலை அவர்கள் ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஊருணியில் புதைத்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்த போலீசார் திலீப் உடலை நேற்று முன்தினம் தோண்டி எடுத்தனர். சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனையில், கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த 25 வயதாகும் முகேஷ்பாண்டி, 20 வயதாகும் ஆகாஷ், 20 வயதாகும் முத்துப்பாண்டி, சக்கரைப்பட்டியை சேர்ந்த 45 வயதாகும் முருகன், 37 வயதாகும் இளையராஜா, ஆண்டிப்பட்டி முத்தனம்பட்டியை சேர்ந்த 32 வயதாகும் சதீஷ்குமார், தேனி அரசு ஐ.டி.ஐ. அருகில் வசிக்கும் சவுமியன் (31) ஆகிய 7 பேரை தேனி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் ஜெயக்குமார், அவருடைய மகன் சஞ்சய் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு போலி நகை விற்பனை செய்யும் நபர்களிடம் பணம் கொடுத்து நகை வாங்கி ஏமாற்றப்பட்டார்களாம். இந்நிலையில் கலுவா, திலீப் ஆகியோர் அதேபோன்று போலியான நகையை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்ததால் அவர்களை கடத்திச் சென்று தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. கைதான நபர்கள் சஞ்சயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைதான 7 பேரையும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் நேற்று காலை ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட தேனியை சேர்ந்த மோகன் (30) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த போலி நகை விற்பனை பின்னணியில் பெண் ஒருவர் இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளதாம். அதுதொடர்பாகவும் விசாரணை தற்போது நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications