தேனியில் நகையை அடகு வைத்த வங்கியிடமே ஒரு லட்சம் வாங்க போகும் பெண்.. இதுதான் புத்திசாலித்தனமான முடிவு
தேனி: தேனி பங்களா மேட்டில் வசிக்கும் முத்துமாரி என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 23 பவுன் நகைகளை தேனி நகர் மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அடகு வைத்து நகைக்கடன் பெற்றார். அடகு வைத்த 2 மாதங்களுக்கு பிறகு நகைகளை திருப்பச் சென்றார். அதில் திரும்ப கொடுக்கப்பட்ட 23 பவுனில் ஒரு பவுன் மோதிரம் காணவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வங்கியில் நகைகளை அடகு வைப்போர் வட்டி கட்டாமல் விட்டால் நகையே பறிபோய்விடுகிறது. நகையை மாற்றி வைக்கவும் பல்வேறு விதிகளை சொல்லி வங்கிகள் விடுவது இல்லை.. மொத்தமாக பணம் கட்டியே இப்போதுவரை மக்கள் நகைகளை திருப்பி வருகிறார்கள். நகைகளை அடகு வைத்த ரசீதுடன் சென்று நகைகளை மொத்தமாக திருப்பி வரும் போது, ஏதாவது தவறு நடந்தால், நகைகள் மிஸ்ஸானால், வங்கிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். தேனியைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

23 பவுன் தங்கம்
தேனி பங்களாமேடு கர்னல் ஜான் பென்னிகுயிக் நகரை சேர்ந்த ரவி என்பவர் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். அவருடைய மனைவி முத்துமாரிக்கு 44 வயது ஆகிறது. அவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 23 தங்க பவுன் நகைகளை தேனி நகர் மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அடகு வைத்து நகைக்கடன் பெற்றார்.
மோதிரம் மாயம்
அடகு வைத்த 2 மாதங்களுக்கு பிறகு நகைகளை திருப்பச் சென்றார். நகைக்கடன் முழுவதையும் செலுத்திய நிலையில், அவருடைய நகைகள் திரும்ப கொடுக்கப்பட்டது. அதை அவர் வங்கியில் வைத்து சரிபார்த்த போது அதில், அவருடைய 1 பவுன் மோதிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் அவர் கேட்டார். அப்போது, அந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர், வாடிக்கையாளர்கள் பலரின் நகைகளை மோசடி செய்து இருப்பதும், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிலர் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்தும் தெரிவித்தனர்.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
இதையடுத்து அவர் தனது 1 பவுன் தங்க நகையை திரும்பக் கொடுக்குமாறு வங்கியில் பல முறை மனு கொடுத்தார். அதற்கு தீர்வு கிடைக்காததால் வங்கி அதிகாரிகளுக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அப்போதும் பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தேனியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார் மூலமாக தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்தார்.
ஒரு லட்சம் கிடைக்கும்
அந்த மனு, தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், உறுப்பினர் சவுந்திரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், மனுதாரர் முத்துமாரிக்கு சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் 1 பவுன் தங்க நகைக்கு அப்போதைய மதிப்பான ரூ.40 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்காவிட்டால் 9 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications