இல்லம் தேடி வரும் வெள்ளம்.. வைகை அணையை திறந்துட்டங்க! ஹை அலர்ட்டில் 5 மாவட்டங்கள்! கோவைக்கு வார்னிங்
தேனி: தொடர் கனமழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருவதை அடுத்து, வைகை ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டதால், வைகை ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தேனி, திண்டுக்க, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பெய்து உள்ளது. அரபி கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.
மேலும், குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வைகை அணை
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை உட்பட தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை கடந்து விறுவிறுவென நிரம்பி விரைவில் முழு கொள்ளளவையும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதற்கட்டமாக வைகை அணையிலிருந்து ஆற்றில் சுமார் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வைகை ஆற்றில் வெள்ளம்
தொடர் கன மழையும் பெய்து வருவதால் ஆற்றுநீருடன் காற்றாற்று வெள்ளமும் இணைந்து,வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையிலான வருவாய் மற்றும் பேரிடர் மீட்புபணிகள் துறையினர், வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கன்னாபட்டி, சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி, விளாம்பட்டி,
நடகோட்டை உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் ஆற்றில் யாரும் இறங்க கூடாது, குழந்தைகள் கால்நடைகளை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக வானிலை
மேலும் தமிழக அரசு மற்றும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தொடர்ந்து மழை தீவிரமாக அடைந்து வருவதால், வைகை ஆற்றிலும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளை நிலக்கோட்டை வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் அடங்கிய குழுவினர் ஆங்காங்கே தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
கோவை வெள்ளம்
இதேபோல, கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை மற்றும் அதன் அணைகட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கபட்டுள்ளது. இந்நிலையில் சில இளைஞர்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் ஆபத்தை உணராமல் மீன்பிடிப்பதுமாக இருப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும் என்றும், இது போன்ற இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications