தேனி அருகே இளம் பெண்ணை கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்த ஊர் மக்கள்.. நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் இளம் பெண் இருந்த நிலையில், அதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் கதவு தாழ்ப்பாளை வெளிப்புறமாக பூட்டி விட்டார். இதனையடுத்து உள்ளே இருந்த 2 பேரும் கதவை திறக்க சொல்லியும் அவர் திறக்கவில்லை. இதனால் அவமானத்தை சந்தித்த அந்த பெண் கடைசியில் விபரீத முடிவெடுத்து உயிரையே விட்டுவிட்டார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கூலித்தொழிலாளியாவர். அவருடைய மனைவி அவந்திகா 20 வயது ஆகிறது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

theni love crime


அதே பகுதியை சேர்ந்த 23 வயதாகும் ராம்குமார் என்பவர் கூலித்தொழிலாளியாவர். இவர் அவந்திகாவின் உறவினர். இவரும், கருப்பசாமி கேரள மாநிலத்துக்கு தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்கள். இதனால் கருப்பசாமி வீட்டுக்கு ராம்குமார் அடிக்கடி சென்று வந்திருக்கிறாராம். இதனால் ராம்குமாருக்கும், அவந்திக்காவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. இந்த விவகாரம் கருப்பசாமிக்கு தெரியவரவே, அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். இருப்பினும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவந்திகா வீட்டுக்கு ராம்குமார் சென்றார். அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.. இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டின் கதவு தாழ்ப்பாளை வெளிப்புறமாக பூட்டி விட்டு கூச்சலிட்டாராம். இதனையடுத்து உள்ளே இருந்த ராம்குமாரும் அந்த பெண்ணுணும் 2 பேரும் கதவை திறக்க சொல்லியும் அவர் திறக்கவில்லையாம்.

மேலும் அந்த நபர், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் இந்த கள்ளக்காதல் ஜோடி குறித்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த ஏரியாவில் உள்ள பொதுமக்கள் பலர் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வீட்டுக்குள் சிக்கிய அவந்திகா, ராம்குமாரை மாடியில் உள்ள அறையில் பரணுக்குள் ஒளிந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராம்குமார் மாடிக்கு ஓடிச்சென்று விட்டார். அதேநேரத்தில் ராம்குமார் உடனான கள்ளக்காதல் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதே என்று அவந்திகா மனம் உடைந்தார். அவமானம் தாங்க முடியாத அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி ராம்குமார் மாடிக்கு சென்றவுடன், தரைதள வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் சேலையால் தூக்குப்போட்டு அவந்திகா உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தநிலையில் சுமார் ஒன்றைரை மணிநேரத்துக்கு பிறகு கதவை திறந்து பொதுமக்கள் வீட்டுக்குள் சென்றுள்ளார்கள். அப்போது வீட்டுக்குள் அவனிகா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாடியில் பதுங்கி இருந்த ராம்குமாரும் வெளியே வந்தார்.

இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவந்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து அவந்திகாவின் அம்மா அளித்த சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரை மாய்த்துக் கொண்ட அவனிகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. தாட்சாயிணி விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+