விசுவாசம் இருந்தால் அதிமுகவில் உயர்பதவிக்கு வரலாம்… தி.மு.க- வில் சாத்தியமில்லை.. ஓ.பி.எஸ் பேச்சு
தேனி: அதிமுகவை எந்த கொம்பாதி, கொம்பனாலும் வீழ்த்த முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளார் லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து, ஆண்டிபட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக என்பது மிகப்பெரிய ஆலமரம், பூகம்பமே ஏற்பட்டாலும் யாராலும் அதனை அசைக்கமுடியாது என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலோடு, அதிமுக காணாமல் போய்விடும் என ஸ்டாலின் கூறுவது ஒருபோதும் நடக்காது என்றும் பேசினார். திமுக வன்முறை கலாச்சாரத்தை கொண்டுள்ள கட்சி என விமர்சித்த ஓ. பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சராக முடியாத பொறாமையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க-வை குறைகூறி பேசி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அடிமட்ட தொண்டன் உயர் பதவிக்கு வருவது தி.மு.கவில் சாத்தியமில்லை எனக் கூறினார். ஆனால், அ.தி.மு.கவில் விசுவாசம் மிக்க தொண்டர்கள், உயர் பதவிக்கு வரமுடியும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய ஓ. பன்னீர்செல்வம், மேலும், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கிறோமா? இல்லையா? என்பதை அவர், தெய்வமாக இருந்து பார்த்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications