தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓடும் காரிலிருந்து சர்ரென பறந்து விழுந்த டயர்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! பரபர சிசிடிவி காட்சி

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் ஓடும் கார் ஒன்றில் இருந்த டயர் அருகில் இருந்த மக்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ஓடும் காரிலிருந்து சர்ரென பறந்து விழுந்த டயர்.. 3 பேர் படுகாயம் - வீடியோ

    ஓடும் கார், லாரியில் இருந்து டயர் கழன்று ஓடும் சம்பவங்கள் இப்போதெல்லாம் அதிகம் நடந்து வருகின்றன. இது போன்ற டயர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கழன்று ஓடும் போது அது பெரிய விபத்துக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

    தமிழ்நாட்டிலும் அவ்வப்போது இது போல டயர் கழன்று சாலையில் ஓடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    டயர் பிரச்சனை

    டயர் பிரச்சனை

    சரியாக டயரை மாட்டாதது, நெட் லூஸாக இருப்பது, அல்லது டயரில் சேதம் ஏற்பட்டு இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படிபட்ட விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல் காரின் மேலே வைக்கும் ஸ்டெப்னி டயர்கள் இதேபோல் விபத்தை ஏற்படுத்துகின்றன. கார், பஸ் மேலே வைக்கப்படும் ஸ்டெப்னி டயர்கள் தவறி கீழே விழும் போது அவை சாலைகளில் பெரிய விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

    தேனி கார்

    தேனி கார்

    இந்த நிலையில்தான் தேனியில் ஓடும் கார் ஒன்றில் இருந்து டயர் அருகில் இருந்த மக்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே இந்த சம்பவம் நடந்துள்ளது. தேனியில் இருந்து மதுரை நோக்கி வேகமாக சென்ற டவேரா ரக காரில் இருந்த டயர் பறந்து வந்து சாலையில் தறிகெட்டு ஓடி உள்ளது. முதலில் காரின் டயர் கழன்று ஓடியதாக மக்கள் நினைத்துள்ளனர்.

    டயர் விழுந்தது

    டயர் விழுந்தது


    ஆனால் விசாரணையில்தான் அந்த டயர் காரின் மேலே ஸ்டெப்னிக்காக வைக்கப்பட்டு இருந்த டயர் என்று தெரிய வந்தது. அதை சரியாக கட்டாத காரணத்தால் அது பறந்து சென்று விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே தேனீர் அருந்த நின்றிருந்தவர்கள் மீது மேல் அந்த டயர் விழுந்தது. இந்த விபத்தில் கண்டமனூர் விலக்கு பகுதியை சேர்ந்த ரகமத்துல்லா என்பவர் படுகாயம் அடைந்தார். அந்த டயர் விழுந்தது. இந்த விபத்தில் கண்டமனூர் விலக்கு பகுதியை சேர்ந்த ரகமத்துல்லா என்பவர் படுகாயம் அடைந்தார்.

     என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    அவருடன் இருந்த 2 பேர் லேசாக காயம் அடைந்தனர். இவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கானாவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படார் என்று அங்கிருந்தவர்கள் மீது டயர் விழுந்த காட்சிகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

    English summary
    Watch a video of a tire jumping out of a car and rammed on people in Theni. தேனியில் ஓடும் கார் ஒன்றில் இருந்த டயர் அருகில் இருந்த மக்கள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X