தேனி அருகே கணவனுக்கு பாயாசம் போட்ட பெண்.. கள்ளக்காதலனுடன் அதிரடியாக கைது
தேனி: தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை , காதலனுடன் பைக்கில் உட்கார வைத்து கூட்டிச் சென்ற மனைவி, கள்ளக்காதலனை வைத்து கத்தியால் குத்த வைத்து கொன்றுள்ளார். மனைவி, தனது கணவனின் கையை நன்றாக பிடித்து கொள்ள, கள்ளக்காதலன் கதை முடித்துள்ளார் . இதையடுத்து மனைவி மற்றும் கள்ளக்காதலனை சின்னமனூர் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் - சங்கராபுரம் ரோடு வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயங்களுடன் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்தது சென்று உடலை கைப்பற்றிய சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் . போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர் வீரபாண்டி அருகே மாணிக்காபுரத்தைச் சேர்ந்த 40 வயதாகும் சென்றாயன் என்பது தெரிய வந்தது . சென்றாயன் உடல் அருகே செப்டம்பர் இரவு டூவீலர் நின்றதாக அதன் பதிவு எண்ணை அவ்வழியாக சென்றவர் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து அந்த இருசக்கர வாகன பதிவெண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். திருப்பூர் பதிவெண் கொண்ட டூவீலரின் உரிமையாளரான டொம்புசேரியைச் சேர்ந்த வினித்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், ''தன் டூவீலரை உடன் பணிபுரியும் மாணிக்காபுரத்தைச் சேர்ந்த ராஜபிரபு இரவல் வாங்கி சென்றார்,'' என்று தெரிவித்தார்.
இதனிடையே போலீசார் நெருங்கிவிட்டதை அறிந்த 30 வயதாகும் ராஜபிரபு , தேனி அல்லிநகரம் போலீசில் செப்டம்பர் 6 ம் தேதி சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது சென்றாயன் மனைவியுடன் (35 வயது), சில மாதங்களாக கள்ளத் தொடர்பு இருந்ததையும், அதை கண்டித்ததால் சென்றாயனை கொலை செய்ததையும் தெரிவித்துள்ளார்.
ராஜபிரபு அளித்த வாக்குமூலத்தில், திருமணம் ஆகி பூங்கொடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. எனக்கு திருமணம் ஆகவில்லை . எங்கள் இருவருக்கும் சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்தது. சென்றாயனின் பெற்றோர் குச்சனூர் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்கிறார்கள்.
செப்டம்பர் 4ம் தேதி நானும் சென்றாயனின் மனைவியும் தோட்டத்தில் இருந்தோம். அங்கு வந்த சென்றாயன் எங்களிடம் கள்ளக்காதல் தொடர்பாக கேட்டு தகராறு செய்தார். அப்போது எனக்கும் சென்றாயனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தோட்ட உரிமையாளர் எங்களை விலக்கி விட்டு வெளியேற்றினார்.
அதன் பின்னர் தோட்டத்திற்கு வெளியே சென்ற சென்றாயன் முழு போதையில் சுற்றிக் கொண்டு இருந்தார்.போதையில் இருந்த சென்றாயனை கொலை செய்ய முடிவு செய்தோம். குச்சனூர் சங்கராபுரம் ரோடு வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பது தெரியும் எனவே இரு சக்கர வாகனத்தில் சென்றாயனை நடுவில் உட்கார வைத்து அழைத்து சென்றோம். வனப்பகுதியில் சென்றாயன் மனைவி தனது கணவரை பிடித்து கொள்ள நான் கத்தியால் பல இடங்களில் குத்தி கொன்றேன். சென்றாயன் போதையில் இருந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை " இவ்வாறு ராஜபிரபு வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து சென்றாயனை திட்டமிட்டு கொன்ற வழக்கில் அவரது மனைவி மற்றும் ராஜபிரபுவை போலீசார் போலீசார் கைது செய்தனர். இரண்டே நாட்களில் கொலையாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் பாலாண்டி, எஸ்.ஐ., சுல்தான் பாட்சா மற்றும் போலீசாரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாராட்டினார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications