தேனியில் மொத்த குடும்பத்திற்கும் எமனாகிய ஒரே ஒரு தீக்குச்சி.. விளையாட்டுக்கு கூட இப்படி செய்யாதீங்க
தேனி: யாரும் விளையாட்டுக்கு கூட பெட்ரோல் கேனை தொடக்கூடாது. பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு விளையாட்டுத்தனமாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களை மிரட்டி பார்க்கலாம் என்று நினைத்தே தீக்குச்சியை உரச வேண்டாம்.. சிலர் விளையாட்டாக பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தீக்குச்சியை எடுத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள். அப்படித்தான் தேனி அருகே கடமலைக்குண்டுவில் ஒருவர் செய்தார். அது மொத்த குடும்பத்தையும் பாதித்துள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள நரியூத்து கிராமத்தை சேர்ந்த 44 வயதாகும் மாரிமுத்து ஓட்டல் கடையில் பணியாற்றும் தொழிலாளியாவார். இவரது மனைவி மீனா (36). இந்த தம்பதிக்கு அக்சயா (8), அபிநயா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதேபோல் நேற்று தம்பதி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாரிமுத்து திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றியிருக்கிறார்

பின்னர் மனைவியிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அப்போது தீக்குச்சியை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து மீது தீப்பற்றியது. அப்போது அருகே இருந்த மீனா, 2 குழந்தைகள் மீதும் தீ பரவியது. இதனால் 4 பேரும் வலியால் அலறியுள்ளனர். இதற்கிடையே சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் மாரிமுத்துவும், மீனாவும் படுகாயமடைந்தனர். இதேபோல் 2 குழந்தைகளும் காயமடைந்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரிமுத்து 80 சதவீத தீக்காயங்களுடனும், மீனா 60 சதவீத தீக்காயத்துடனும் உயிருக்கு போராடி வருகிறார்கள். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக தீக்காயங்கள் 40 சதவீதத்திற்கு மேல் இருந்தாலே நிலைமை சிக்கலாகும்.அந்த வகையில்60 சதவீதம் தீக்காயத்துடன் உள்ள மீனாவும், 80 சதவீத தீக்காயத்துடன் உள்ள மாரிமுத்துவும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். பெட்ரோல் ஊற்றிய பின்னர், விளையாட்டுக்கு கூட தீக்குச்சியை எடுக்கவே கூடாது. என்ன சண்டை என்றாலும் உடலில் பெட்ரோலை ஊற்றக்கூடாது.
சிலர் விளையாட்டாக மிரட்ட நினைத்து பெட்ரோலை சிறிய அளவில் ஊற்றி, தீக்குச்சியை உரசுவதுபோல் பாவலா செய்வார்கள்.. அப்படி செய்த அடுத்த சில நொடிகளில் தீ குப்பென்று பிடித்துவிடும். அப்படி விளையாட்டாக தீக்குச்சியை பற்ற வைத்து அழிந்தவர்கள் உண்டு. எனவே தயவு செய்து எந்த காரணம் கொண்டு உடலில் பெட்ரோலை ஊற்ற வேண்டாம். தீக்குச்சிகளை வைத்து விளையாட வேண்டாம். அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் மோசமாக பாதிக்கும்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோலுக்கு நீங்க தரும் ரூ.500 யாருக்கு செல்கிறது.. அரசின் வரி எவ்வளவு? தலை சுற்ற வைக்கும் கணக்கு -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications