டிடிவி தினகரன் வந்த வாகனம்.. தடுத்த காவல் அதிகாரி மீது ஏற்ற முயற்சியா? வெளியான பரபரப்பு வீடியோ
தேனி: தேனியில் மனுத்தாக்கலின் போது டி.டி.வி.தினகரன் தன் பிரச்சார வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றி வந்ததாகவும், அதை தடுத்த காவல் அதிகாரி மீது, வேனை ஏற்று வகையில் டிரைவர் வாகனத்தை தாறுமாறாக இயக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை திமுகவினர் வெளியிட்டுள்ளனர்.
தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக டிடிவி தினகரன், தேனி அருகே அன்னஞ்சி பகுதியில் இருந்து தனது கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தார். அப்போது டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்லும் வழியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் காத்திருந்த ஓ பன்னீர்செல்வம். அன்னஞ்சியில் இருந்து ஊர்வலமாக வந்த தினகரனை சந்தித்து வாழ்த்த தெரிவித்தார்.
பின்னர், தினகரன் மனு தாக்கல் செய்வதற்கு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது அவருடன் ஓபிஎஸ் போகவில்லை.. அவருடன் ஓபிஎஸ் மகனும், தேனி தொகுதியின் தற்போதைய எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் மட்டும் உள்ளே சென்றார். வேட்பு மனு தாக்கல் வெற்றிகரமாக முடித்த டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்கள் படை சூழ அங்கிருந்து புறப்பட்டு சென்றார்..
இதனிடையே டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய பிரச்சார வேனில் வந்த போது, அதிகப்படியான ஆட்களை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மறிக்க முயன்றனர்.
இந்நிலையில் டிடிவி தினகரனின் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர், வாகத்தை மறித்த காவல் அதிகாரி மீது வாகனத்தை ஏற்றும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக குற்றச்சாட்ட எழுந்தது. இது தொடர்பாக திமுக ஆதரவாளர்கள் செய்தியில் வந்த வீடியோவை வெளியிட்டு, அதில் தினகரன் தன் பிரச்சார வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றி வந்ததை தடுத்த காவல் அதிகாரி மீது, வேனை ஏற்றி கொல்ல முயன்றதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக டிடிவி தினகரன் மற்றும் அமமுக நிர்வாகிகள் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று பிற்பகர் தேனி ஆட்சியர் அலுவலகம் வந்த போது, டிடிவி தினகரன் போலீசாரின் தடுப்புகளை மீறி வாகனத்தில் உள்ளே சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications