தேனி அருகே மலைப்பகுதியில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து.. ஒரு நொடியில் முடிந்த மாணவியின் வாழ்க்கை
தேனி: தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி ஏராளமான சுற்றுலா தலங்களை கொண்ட கேரளாவின் மலைப்பகுதி மாவட்டம் ஆகும். இங்குள்ள கட்டப்பனையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தார்கள். அரசு பேருந்து கட்டப்பனை-எர்ணாகுளம் சாலையில், இடுக்கி அருகே மணியப்பாறையில் சென்ற போது யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஏராளமான சுற்றுலா தலங்களை கொண்ட மலை மாவட்டம் ஆகும். அங்கு தேக்கடி, மூணாறு, வாகமன் உள்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தேயிலை தோட்டங்களும், அடர்ந்த வனப்பகுதிகளும் அமைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தை போல் எப்போது குளுகுளுவன கால நிலை கொண்ட இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. அதில் கட்டப்பனை முக்கியமான நகரமாகும்.. இங்கிருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.

அந்த வகையில் கட்டப்பனையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த அரசு பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ்சை சிஜூ (வயது 45) என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். கட்டப்பனை-எர்ணாகுளம் சாலையில், இடுக்கி அருகே நேரியமங்கலத்தை அடுத்த மணியப்பாறையில் பஸ் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடத்தொடங்கியது.
ஒரு கட்டத்தில், அந்த அரசு பஸ் சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். டிரைவர் உள்பட மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். விபத்தில் சிக்கிய பயணிகள் 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நேரியமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்களும் சேர்ந்து, பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த 20 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோதமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பென்னி என்பவரது மகள் அனிட்டா (14) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான அனிட்டா, கட்டப்பனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து சிறுமி பலியான சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications