பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று.. உடம்பெல்லாம் கடித்து குதறிய சைக்கோ ராஜ்குமார்!
பெண்ணை பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
தேனி: வேலைக்கு போய்ட்டு இருந்த பெண்ணை.. காட்டுக்குள் தூக்கி சென்று உடம்பெல்லாம் கடித்து வைத்துவிட்டார் ராஜ்குமார்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு விவசாயி. 35 வயதாகிறது. நாச்சியார்புரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு இவர் சென்றிருக்கிறார். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தோட்ட வேலைக்காக போய் கொண்டிருந்தார்.

அந்த பெண்ணை பார்த்ததும் ராஜ்குமார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. யாரும் வருகிறார்களாக என சுற்றிலும் ஒரு நோட்டமிட்டார்.. பிறகு அலேக்காக அந்த பெண்ணை காட்டிற்குள் தூக்கி கொண்டு ஓடினார். இதனால் பதறி போன அந்த பெண் கதறினார்.. சத்தம் போட்டார்.. ஆனாலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால், ஒருவரும் வரவில்லை.
காட்டுக்குள் தூக்கி சென்ற ராஜ்குமார் பெண்ணை நாசம் செய்துள்ளார். அப்போதும் வெறி அடங்காமல், அந்த பெண்ணின் உடம்பெல்லாம் கடித்து கடித்து வைத்துவிட்டார். உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், ராஜ்குமாரிடம் இருந்து தப்பித்து, க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை கூறி அழுதார். இதையடுத்து, போலீசார், ராஜ்குமாரை கைதுசெய்துள்ளனர்.
கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. காட்டிற்குள் தூக்கி சென்று பெண்ணை கற்பழித்துடன், உடம்பெல்லாம் கடித்து காயப்படுத்திய சம்பவம் ஆண்டிப்பட்டியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications