தேனியில் நள்ளிரவு 2 மணிக்கு.. யார் அந்த இரண்டு இளைஞர்கள்.. ஆடிப்போக வைத்த சம்பவம்
தேனி: தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது அந்த தெருக்களில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பாட்டில் மூலம் பெட்ரோலை திருட முயற்சித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் ஆக இருக்கிறது. பல மாதங்களாகவே ஒரே விலையில் உள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தங்களால் முடிந்த அளவிற்கு பெட்ரோல் போட்டு வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். பலர் டேங்கையே நிறைத்து வைப்பதும் வழக்கம். அப்படி அதிக பெட்ரோல் உள்ள வண்டிகளை குறிவைத்து பெட்ரோல் திருடுவது ஆங்காங்கே நடக்கிறது.

குறிப்பாக இருசக்கர வாகனங்கள் அதிகமாக உள்ள தேனியில், இருசக்கர வாகனங்களை குறிவைத்து பெட்ரோல் திருடுவது அதிகமாக இருந்துவருகிறது. வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு இருசக்கர வாகனங்கள் இன்றைக்கு இருக்கிறது. அந்த வாகனங்களில் காலையில் போடும் பெட்ரோல் இரவில் மாயமாகிவிடுகிறது. முதலில் வண்டியில் மைலேஜ் பிரச்சனை என்று நினைத்தால், இங்கு நிலைமை வேறாக உள்ளது. ஏனெனில் வேறு ஊர்களில் வாகனங்களில் நிற்கும் போது பெட்ரோல் குறைவது இல்லை. அதன்பின்னரே பெட்ரோல் திருட்டு நடைபெறுவது உறுதியானது. சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேனியில் பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது அந்த தெருக்களில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பாட்டில் மூலம் பெட்ரோலை திருட முயற்சித்துள்ளனர் ஆனால் அதிலிருந்து பெட்ரோல் எடுக்க முடியாததால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் கேன் மூலம் பெட்ரோலை திருடி செல்கின்றனர்.
இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடும் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் இது போன்று பெட்ரோல் திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், திருட்டில் ஈடுபடும் இளைஞர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications