சினிமா பாணியில் சிக்கிய திருடன்: திருட வந்த இடத்தில் இப்படியா நடக்கணும்
சினிமா பட பாணியில் தனியார் குடோனில் எலக்ட்ரிக்கல் உபகரணங்களை திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடன் கூட்டாக திருட வந்தவர்களும் பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்துள்ளது.
சில சினிமாப்படங்களில் காமெடி திருடர்கள் திருடச்செல்லும் போது ஏதாவது ஒரு சம்பவம் அவர்களை சிக்க வைத்துவிடும். ஒரு படத்தில் அக்ரஹார தெருவில் திருடச்செல்லும் வடிவேலு அங்குள்ளவர்களிடம் சிக்கி அடிபடுவார், ஒருபடத்தில் நகைகளைப் பறித்துக்கொண்டு குதிரையில் ஏறித்தப்பிக்க அது கடற்கரையில் சுற்றும் குதிரை என்பதால் திரும்பவும் குதிரைக்காரரிடமே வர வடிவேலு சிக்கிக்கொண்டு அடிபடுவார்.
ஒருபடத்தில் பிக்பாக்கெட் அடிக்க இன்ஸ்பெக்டர் பின் பாக்கெட்டில் கைவிட்டு அவருடனேயே அலைவார் இதுபோன்ற காமெடிகள் பழைய படங்களிலும் உண்டு சுருளிராஜன் ஒரு கடைக்குள் புகுந்து திருட நினைக்க 3 நாட்கள் பந்து ஆகிவிட கடையில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பஞ்சை தண்ணீரில் நனைத்து சாப்பிடுவார். இதுபோன்ற பல காமெடிகள் படத்தில் உள்ளது. இதேப்போன்றதொரு சம்பவம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்துள்ளது.

திருடப்போன இடத்தில் கரண்டு கம்பிலையாடா கைவைப்பாய், உன்னால நாங்களும் சிக்கிக் கொண்டோம் என்று புலம்பியபடி இருவரும் சென்றனர்.
சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் , எல்என்டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மூன்று பேர் காவலாளிகளின் பாதுகாப்பையும் மீறி திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்துள்ளன்ர். அவர்கள் நோக்கம் விலை உயர்ந்த எலக்ட்ரிக்கல் உபகரணங்களை திருட முயன்றனர்.
அப்போது ஸ்விட்ச் பாக்ஸில் கைவைத்த அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முருகன்(24) என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு இரண்டு கைகளும் கருகின. இதைப்பார்த்த அவருடன் திருட வந்த மற்ற இருவரும் தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். முதல் திருடன் முருகன் போட்ட சத்தத்தைக் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அங்கு ஓடி வந்து பார்த்தபோது இரண்டு கைகளும் கருகிய நிலையில் முருகன் கீழே கிடந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்து திருவல்லிக்கேணி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டு கிடந்த முருகனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முருகன் கொடுத்த தகவலின்பேரில் தப்பிச் சென்ற கூட்டாளிகள் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் பாலாஜி, விஜய் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications