பிருந்தாவுக்கு 3 பேருடன் லிங்க்..’அந்த’ நேரத்தில் அழுத குழந்தை! நினைச்சு கூட பார்க்க முடியாத கொடூரம்
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே திருமணம் கடந்த உறவுக்கு தடையாக இருந்த இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சிறுமியின் தாய் கொலை சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை என்றும், கொலை செய்த கள்ளக்காதலர்களும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிருந்தாவுக்கு 27 வயது ஆகிறது. அவருக்கும் திசையன்விளை (Thisayanvilai) அருகே துவரம்பாடு கிராமத்தைச் சேர்ந்த சரத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வேறு வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பிரச்சனை வந்திருக்கிறது. இதை அடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து சரத் கோவைக்கு சென்று அங்குள்ள ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிருந்தா தனது மகளுடன் மகாதேவன் குளத்தில் வசித்து வந்திருக்கிறார். பிருந்தாவின் பெற்றோர் தூத்துக்குடியில் வசிக்கிறார்களாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் இருந்த தர்ஷினியை தூக்கிக்கொண்டு நடுவக்குறிச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற பிருந்தா குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறினார்.
ஆனால் தர்ஷினியின் கன்னம், உதடு, காது மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் வந்தது. தொடர்ந்து திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு தர்ஷினியை கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மேலும் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இதை அடுத்து பிருந்தாவிடம் போலீசார் விசாரித்த போது பழைய டேப் ரெக்கார்டர் போல' கட்டில் இருந்து விழுந்து விட்டார்' என ஒரே மாதிரி பிருந்தா கூறி இருக்கிறார். போலீசார் துருவி துருவி விசாரித்த போது சிறுமி கொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோவையில் சரத் வேலை பார்க்கும் நிலையில் பிருந்தாவுக்கு பல ஆண்களுடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி துவரம்பாடு பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்தும் லிங்க செல்வன், முத்துசுடர் ஆகியோர் மது போதையில் பிருந்தாவை துவரம்பாடு ஐஸ்கிரீம் கம்பெனிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது மகளையும் பிருந்தா அழைத்துச் சென்றிருக்கிறார். ஏற்கனவே அங்கு பெஞ்சமினும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
பிருந்தா, முத்துச்சுடர் உடன் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது சிறுமி தொடர்ந்து அழுததாக கூறப்படுகிறது. சிறுமியை ஐஸ் கம்பெனியில் மாடிக்கு அழைத்துச் சென்று ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் தாய் வராததால் தர்ஷினி அழுது கொண்டிருந்திருக்கிறார்.
இதனால் அந்த சிறுமிக்கு இருவரும் மதுவை ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போதும் அழுததால் சிறுமி என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதில் சிறுமி மயங்கியதாக கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணிக்கு பிருந்தாவிடம் குழந்தை தூங்கி விட்டதாக கூறி கொடுத்து இருக்கிறார்கள். வீட்டுக்கு சென்ற பிறகும் பிருந்தா தனது மகள் தர்ஷினி மூச்சுப்பேச்சு இல்லாமல் இருப்பதால் அச்சமடைந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றதும், அதற்கு பிறகு மருத்துவமனையில் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது.
தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை கொன்ற லிங்கச்செல்வன், பெஞ்சமின், முத்துசுடர், பிருந்தா ஆகியோரை கைது செய்துள்ளனர்.
தீவிர விசாரணைக்கு பிறகு பிருந்தா திருநெல்வேலி கொக்கிரகுளம் மகளிர் கிளை சிறையிலும் மற்ற மூவரும் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications