Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலியில் 17 வயது மாணவரை அழைத்து அடிக்கடி எல்லை மீறிய 24 வயது இளம் பெண்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17வயது மாணவனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்த 24வது இளம் பெண் போலீசிடம் சிக்கியுள்ளார். அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் அறிய முக்கியமான விஷயத்தை பார்ப்போம்.

இன்றைக்கு 2கே கிட்ஸ் காதல் என்ற பெயரில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை விரும்புகிறார்கள். அவர்களை பற்றி எந்த விவரமும் அறியாமல் பார்த்த உடன் காதலில் விழுகிறார்கள்.. விரும்பிய எல்லா இடங்களுக்கும் போய் சுற்றுகிறார்கள்.. கடைசியில் சண்டை போட்டு பிரிந்துவிடலாம் என்று கழட்டிவிட நினைக்கிறார்கள்.

Tirunelveli student


அப்படி பிரிந்து செல்லும் போது, அதை தாங்க முடியாத சிறுமி, குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளிக்கிறார்.. இறுதியாக போக்சோவில் உள்ளே போகும் நிலை 18 வயது 20 வயதாகும் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. ஒருவேளை காதலியுடன் மீண்டும் சேர நினைத்தாலும் ஜெயில் வாசத்திற்கு பிறகே சாத்தியமாகிறது. அதாவது காதல் மயக்கததில் மைனர் பெண்ணுடன் எல்லை மீறினால் 18 வயது ஆனாலும் சரி. 25 வயதானாலும் சரி, கண்டிப்பாக சிறைக்கு போக வேண்டியது வரும்.

இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமே பொருந்தும்.. 18 வயது நிறைவடையாத சிறுவனை காதலித்து, அவனுடன் எல்லை மீறிய இளம் பெண்கள், கடைசியில் திருமணம் செய்ய அவன் மறுக்கும் போது, பாதிக்கப்படுவது இளம் பெண் தான். மைனர் பையனுடன் எல்லை மீறிய குற்றத்திற்காக இந்த இளம் பெண் வயது 18 ஆக இருந்தாலும் சரி, 20 வயது ஆக இருந்தாலும், 24 வயதாக இருந்தாலும் போக்சோவில் உள்ளே போக வேண்டியதிருக்கும். அப்படித்தான் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அந்த இளம்பெண் தனது வீட்டுக்கு மாணவரை அடிக்கடி வரவழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த மாணவர் அதற்கு சம்மதிக்க மறுத்து விட்டார்.

தன்னை காதலித்துவிட்டு, தன்னோடு ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாணவர் பயிலும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவரை இடைநீக்கம் செய்தார்கள். இந்த விவகாரம் அப்போதுதான் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த மாணவரின் தாயார், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டயாப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஒருவேளை அந்த சிறுவனின் வயது 18க்கு மேல் ஆகி இருந்தது என்றால், அந்த பெண்ணுக்கு பதில் சிறுவன் தான் உள்ளே போக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+