பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் முத்து மனோ என்பவர் உயிரிழந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு உட்பட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக முத்து மனோ உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது சிறையில் திடீரென மோதல் ஏற்பட்டது. சிறையில் ஒரு பிரிவினர் அந்த நால்வரையும் சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துமனோ நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த முத்து மனோ, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் உயிரிழந்தார். தாக்குதலில் காயமடைந்த மற்ற மூவரும் பாளையங்கோட்டை மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications