பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் விவகாரம்.. இன்று முதல் அமுதா ஐ.ஏ.எஸ் 2-ம் கட்ட விசாரணை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பற்களை போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் பிடுங்கி எறிவதாக எழுந்த புகார்கள் தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். தமது 2-ம் கட்ட விசாரணையை இன்று தொடங்குகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பை போலீஸ் சர காவல்நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்கள் பற்களை இழந்து வீடு திரும்பினர். ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணையின் போது பற்களை குறடு உள்ளிட்ட ஆயுதங்களால் பிடுங்கி எறிந்து சித்ரவதை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யபப்ட்டார்.

Ambasamudram custodial torture case 2nd Phase Probe to start today

அத்துடன் இது தொடர்பான விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 10-ந் தேதி அமுதா தமது விசாரணையை தொடங்கினார். ஆனால் விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்றும் நாளையும் விசாரணை அதிகாரி அமுதா, 2-ம் கட்ட விசாரணையை தொடங்க உள்ளார். அம்பை தாலுகா அலுவலகத்துக்கு நேரில் வந்து பல்வீர்சிங் மீதான புகார்களை பொதுமக்கள் நேரில் தெரிவிக்கலாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாதவர்கள் [email protected] என்ற இ மெயிலில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது 82488 87233 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+