கர்ப்பிணியுடன் பைக்கில் போன கணவர்.. அதி வேகமாக வந்து மோதிய கார்.. சிசுவுடன் சேர்த்து 3 பேரும் பலி

கார் - பைக் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உட்பட 3 பேர் பலியானார்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நிறைமாத கர்ப்பிணியை பைக்கில் உட்கார வைத்து சென்று கொண்டிருந்தார் கணவர்.. அப்போது எதிரே வந்த படுவேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியதில் 5 வயது குழந்தை, கணவர், கர்ப்பிணி மனைவி ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. இதில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தது.. இந்த சம்பவம் நெல்லை அருகே நடந்து மக்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ளது குமாரசாமிபுரம்.. இங்கு வசிதுது வந்தவர் மாதவன் துரை.. இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி.. மனைவி பெயர் ராஜேஸ்வரி.. இவர்களுக்கு பாரதிராஜா என்ற 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

தற்போது ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்.. நிறைமாத கர்ப்பிணி. அதனால் பிரசவத்துக்காக அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்.. ஊரடங்கு என்பதால் மகனுடன் மாதவன் மட்டும் தனியாக வீட்டில் முடங்கி இருந்துள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

எனினும், இந்த நேரத்தில் மனைவி தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று நினைத்த மாதவன், அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தார்.. அதன்படியே மாமியார் வீட்டிற்கு சென்ற மாதவன், பைக்கில் மனைவியை உட்கார வைத்து அழைத்து வந்தார்.. கூடவே பாரதிராஜாவையும் அழைத்து சென்றிருந்தார்.

பைக் - கார்

பைக் - கார்

3 பேரும் பைக்கில் குமாரசாமிபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.. முக்கூடல்- கடையம் சாலையில் வந்தபோது, எதிரே ஒரு கார் தாறுமாறாக வேகமாக வந்து பைக்கில் மோதியது.. இதில்,மாதவன், பாரதிராஜா இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.. கர்ப்பிணி மனைவி தூக்கி வீசப்பட்ட நிலையில் அருகில் இருந்தோர் பதறியடித்து கொண்டு அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

சிசு உயிரிழப்பு

சிசு உயிரிழப்பு

தகவலறிந்து முக்கூடல் போலீசார், வழக்குப் பதிவு 3 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. அப்போது கர்ப்பிணிக்கு நிகழ்த்தப்பட்ட உடற்கூறு ஆய்வின் போது வயிற்றில் உள்ள சிசுவும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் விசாரணை ஆரம்பமாகியது.

விசாரணை

விசாரணை

பைக்கில் மோதியது எதிரே வந்த ஒரு சொகுசு கார் என்றும், வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது பேங்க் அதிகாரி சுப்பிரமணி என்பதும் தெரியவந்துள்ளது.. ஏடிஎம்களுக்கு பணம் போடுவதற்காக இவர் சென்று கொண்டிருந்தபோதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததுடன், கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசுவும் சேர்ந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை தந்துள்ளது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+