தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோவால் பரபரப்பு
நெல்லை: தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என நெல்லை பாஜக மாவட்டத் தலைவரிடம் இந்து மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் பேசிய ஆடியோ லீக்காகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி என்கிற போதிலும் அங்கும் பாஜக வெல்லவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் மாநில துணைச் செயலாளர் உடையார் என்பவர் நெல்லை பாஜக மாவட்டத் தலைவர் தமிழ்ச் செல்வன் என்பவருக்கு போனில் பேசியுள்ளார். அதில் தமிழகத்தில் பாஜக எங்குமே வெல்லவில்லையே என இருவரும் கவலைத் தெரிவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நெல்லையில் நயினார் நாகேந்திரன் பணத்தையெல்லாம் கட்சியினரை நம்பி கொடுக்காமல் அவருடைய உறவினர்களை நம்பி கொடுத்துவிட்டார்.
ஆனால் அவர்கள் யாருமே வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிக்கவில்லை. மேலும் கட்சியில் உள்ளடி வேலைகளை யாரோ பார்த்திருக்கிறார்கள். இதனால்தான் நெல்லையில் பாஜக தோற்றது என கூறியபடியே உடையார், தமிழகத்தில் பாஜகவால் ஓட்டை வாங்க முடியுமா, எவனையாவது அடிக்க தெம்பு திராணி இருக்கிறதா? கலவரம் செய்தால்தான் பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியும்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமாருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஜாதி ரீதியிலான கட்சியாக மாறிவிட்டது. அண்ணாமலையின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சதி செய்துவிட்டனர். இதனால்தான் தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெற செய்யாமல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இதற்கு முன்னால் இருந்த எந்த தலைவர்களும் எழுச்சிகரமான பணியை செய்யவில்லை. கட்சியினர் வேலை செய்தால், தமிழகத்தில் பாஜகவை வெற்ற பெற செய்திருப்பார்கள். இவ்வாறு உடையார் பேசியுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் தமிழகத்தில் கலவரமும், வன்முறையும் அதிகரித்து வருவதாக பாஜக, இந்து அமைப்புகள் கூறி வரும் நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சி நிர்வாகியே கலவரம் வந்தால்தான் பாஜக வளரும் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications