அறிவியல் துறையில் சாதனை படைக்கும் இந்தியா.. வெடிகுண்டு மிரட்டல்! .. பரபரத்த அறிவியல் மையங்கள்
திருநெல்வேலி: அறிவியல் துறையில் இந்தியா இன்று வரலாறு படைக்க இருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு மர்நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், திருநெல்வேலி அறிவியல் மையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று இந்தியா சார்பில் ஆதித்யா எல்1 எனும் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது 127 நாட்கள் பயணத்திற்கு பின்னர் இன்று எல் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்திய அறிவியல் துறைக்கு முக்கியமான நாளாகும்.

இந்த கொண்டாட்டத்தில் துறையினர் இருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கிறது. அதில்தான் வெடிகுண்டு குறித்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அனைத்து அறிவியல் மையங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. இதிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் தீவிர ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications