நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொடூர கொலை! ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை- கேஎஸ் அழகிரி வேதனை
திருநெல்வேலி: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஓராண்டாகியும் நீதியில்லை என்றும் சிபிசிஐடி விசாரணை மந்தமாகவே நடைபெறுவதாக நெல்லையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான கே.எஸ்.அழகிரி திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல முக்கிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பேசினார். குறிப்பாக நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஓராண்டாகியும் நீதியில்லை என வேதனை தெரிவித்தார்.

நியாயம் கிடைக்கவில்லை
செய்தியாளர்களிடம் பேசிய கே எஸ் அழகிரி, "நெல்லை கிழக்கு மாவட்ட தலைவருக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை.. கொலை அல்லது தற்கொலை என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.. சிபிசிஐடி விசாரணை செய்து வந்தாலும், ஓராண்டுக்கு மேலாகியும் முடிவு தெரியவில்லை. குற்றங்கள் நடப்பது சகஜம் என்ற போதிலும், தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
வேதனை
சில நேரங்களில் நிரபராதிகளைப் பிடித்து வைப்பதும் நடக்கிறது. இந்த விஷயத்தில் தமிழகக் காவல்துறை பொறுப்புடன் குற்றவாளிகளைத் தேடி வருகிறது. அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்பட்டாலும், திருநெல்வேலியில் அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த தலையீடு இல்லை. இருப்பினும், சிபிசிஐடி விசாரணை மந்தமாக நடைபெறுவதால் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஓராண்டாகியும் நீதியில்லை" என்று வேதனை தெரிவித்தார்.
அடகு வைக்க புதிய விதிகள்
தொடர்ந்து பேசிய கே எஸ் அழகி, "இந்திரா காந்தி ஏழை மக்களுக்காக வங்கிகளை தேசியமயமாக்கினார். இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழைகள் கடன் பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தினர். ஆனால், தற்போது வங்கிகள் மற்றும் நகை அடகு நிறுவனங்களில் நகைகளை அடகு வைக்கச் சென்றாலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
சாதாரண தொழிலாளர்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காக அடகு வைக்கும் நகைகளுக்கும் ஆதாரம் கேட்கிறார்கள். இது கள்ளச்சந்தையில் நகை வாங்குபவர்களுக்கு வேண்டுமானால் ஆதாரம் இருக்கும்.. ஆனால் சாதாரண மக்களுக்கு இருக்காது. தொலைக்காட்சி முழுவதும் நகை அடகு விளம்பரங்கள் பெருகிவிட்ட நிலையில், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நகைக்கடன் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும்" என்றார்.
பாஜக மீது விமர்சனம்
தொடர்ந்து மத்திய பாஜக அரசை விமர்சித்துப் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி மத நம்பிக்கை உடைய கட்சிதான் என்ற போதிலும், ஒரு மதத்திற்காக இன்னொரு மதத்தை வெறுக்க மாட்டோம். "அன்புதான் நம்முடைய மதம்" என்ற காங்கிரஸ் கற்றுக் கொடுத்த பாடத்திற்கு மாறாக, பாஜக வெறுப்பு அரசியலை உருவாக்குகிறது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த வெறுப்பு அரசியல் அதிகமாக இருப்பது கண்டிக்கத்தக்கது" என்றார்.
தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்துப் பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24 அன்று நிதி ஆய்வுக் கூட்டத்திற்குச் செல்வதைக் காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அவர் சென்றால்தான் தமிழகத்தின் உரிமைகளை வலிமையாக எடுத்துச் சொல்ல முடியும். தமிழகத்திலிருந்து அதிக ஜிஎஸ்டி மற்றும் ஐடி வருவாய் மத்திய அரசுக்குச் சென்றாலும், அதற்குரிய நிதி தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேட்கும்போது நிதி அமைச்சர் புள்ளிவிவரங்கள் கொடுப்பதில்லை. எனவே, முதலமைச்சர் நேரடியாகச் சென்று பேசுவது வரவேற்கத்தக்கது
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக - பாஜக கூட்டணி என்பது தமிழகத்திற்கு அதிமுக செய்துள்ள இன்னொரு பெரிய துரோகம்.. நீட் தேர்வு விஷயத்தில் கூட சட்டமன்றத்திற்குத் தெரிவிக்காமல் உள்துறை அமைச்சகம் நிராகரித்ததை அதிமுக மறைத்திருந்தது.. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்குத் தெரியாத விஷயங்கள் இருக்கக்கூடாது, அரசியல் சட்டம்தான் உயர்ந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி உண்மைகளை மறைத்தார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள் தற்போது இணைந்துவிட்டதால், இதற்கான விளக்கத்தை மக்களுக்குத் தர வேண்டும்
இந்தியா பாகிஸ்தான் மோதல்
இந்திய - பாகிஸ்தான் போரில் இந்திய ராணுவம் மகத்தான வெற்றி பெற்றது.. நமது பிரம்மோஸ் ஏவுகணை லாகூர் வரை சென்றது.. ஆனால், இது குறித்துப் பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டியது கடமை. 1962ல் சீனாவுடனான போரின்போது பின்னடைவு ஏற்பட்டபோது நேரு 24 மணி நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி விளக்கினார். ஆனால் இப்போது உண்மைகளை மூடி மறைக்கிறார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் சண்டையை நிறுத்தியதாகக் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. நம் நாட்டுப் பிரச்சனையில் அவர் தலையிட அவர் யார்?
தீவிரவாதிகள் நம் மக்களைக் கொன்றதற்கு நாம் பதிலடி கொடுக்கும்போது, இதில் டிரம்ப்புக்கு என்ன சம்பந்தம்? மோடிதான் நாட்டை நடத்துகிறாரா அல்லது டிரம்ப்பா? எல்லாவற்றையும் மூடி மறைக்கக் கூடாது.. நாடாளுமன்றத்தில் எதுவும் சொல்லாமல் அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு எம்பிக்கள் குழுவை அனுப்பிப் பேசச் சொல்வது சரியல்ல. உள்நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும், நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். ஏன் நாடாளுமன்றத்தைக் கூட்டவும், விவாதிக்கவும், பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவும் தயங்குகிறார்கள்" என கேள்வி எழுப்பினார்.
-
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications