Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ள நிவாரணம் அதிரடியாக உயர்வு.. பயிர், வீடு சேதத்திற்கு எவ்வளவு தெரியுமா? ஸ்டாலின் மேஜர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதேபோல மழை வெள்ள பாதிப்புகளுக்கான பிற நிவாரண தொகையையும் உயர்த்தி அறிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

CM MK Stalin announced the increase of flood relief fund for Nellai, Thoothukudi districts

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி குறித்து கேள்விகள் எழுந்திருந்தன. இது தொடர்பான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார். அதாவது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவடத்தில் கடும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையையும் உயர்த்தி அறிவித்திருக்கிறார்.

தென்காசி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம்!

அதாவது, “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் நிதி உதவி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதம் அடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை ரூ.5000. ஆனால் தற்போது இந்த தொகை ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல மழையினால் 33 விழுக்காடு அல்லது அதற்கு மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர் இரவை பாசன பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 லிருந்து ரூ.17,000ஆக உயர்த்தி வழங்கப்படும். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு அல்லது அதற்கு மேலாக சேதமாகி இருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000 வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.6000! ஸ்டாலின் அதிரடி

மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.7,410 இதற்கு முன்பு இழப்பு இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகை ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். எருது பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.33,000ஆக இருந்த நிவாரணத் தொகை ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல வெள்ளாடு, செம்மறியாடு உயிரிழப்புக்கு ரூ.3000 இழப்பீடாக வழங்கப்பட்டிருந்த நிலையில், அதை ரூ.4000 ஆக உயர்த்தி வழங்க உத்தர உத்தரவிடப்பட்டுள்ளது.

சேதம் அடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கான நிவாரண உதவியை பொருத்த அளவில், முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.32,000 நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை ரூ.50,000 ஆக உயர்த்தப்படுகிறது. பகுதியாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.10,000 லிருந்து 15,000 ஆக நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+