கே.எஸ்.அழகிரி நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும்! வாட்ஸ் அப்பில் பதிவு போட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது!
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என வாட்ஸ் அப்பில் பதிவு வெளியிட்ட நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை கே.எஸ்.அழகிரி சட்டை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திசையன்விளையில் இன்று நடைபெறுகிறது. இதில் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் நாங்குநேரியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர், கே.எஸ்.அழகிரி திசையன்விளை வரும் போது வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து வாட்ஸ் அப்பில் பதிவு போட்டிருக்கிறார். இது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த அம்புரோஸ் மீது நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அம்புரோசை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் வட்டார அளவில் கூட கோஷ்டிப்பூசல் எந்தளவுக்கு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
நாங்குநேரி அம்புரோசை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ரூபி மனோகரனுக்கும் கே.எஸ்.அழகிரிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரியை நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தும் முக்கிய பிரமுகர்களில் ரூபி மனோகரனும் ஒருவர். இதனிடையே திசையன்விளையில் நடைபெறும் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பெரிய பின்னடைவே இந்த கோஷ்டிப் பூசல் தான். இதனால் தான் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தடுமாற வேண்டிய சூழல் நிலவுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications