Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலி பானுமதி.. ஆசையோடு வீட்டுக்கு போன தொழில் அதிபர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி பானுமதி.. பெயரை கேட்டாலே தொழில் அதிபர்களுக்கு கலக்கமே வந்துவிடும் போல.. பல தொழில் அதிபர்களை ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு வரவழைத்து லட்சக்கணக்கில் சுருட்டி உள்ளவர், சேலம் தொழில் அதிபரை ஏமாற்றிய வழக்கில் சிக்கியவர், சென்னையைச் சேர்ந்தவரிடம் ரூ.5.25 லட்சத்தை பறித்தது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்த 47 வயதாகும் நித்தியானந்தம் தொழில் அதிபர் ஆவார். இவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த 40 வயது பெண்ணான பானுமதி என்பவருடன் பேஸ்புக் மூலமாக பழகி வந்தார். முதல் முதலாக நித்தியானந்தமை பானுமதி கடந்த 3 மாதம் முன்பு தொடர்பு கொண்டார். அவர்கள் கடந்த 3 மாதங்களாக பேஸ்புக் மூலமாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்த பழக்கத்தை வைத்து பானுமதி அடிக்கடி நித்தியானந்தமுடன் பேசி வந்திருக்கிறார்.

Details of those who went to Tirunelveli Banumathi house including Salem Chennai business magnates

இதனிடையே கடந்த ஏப்ரல் 29-ந்தேதி பானுமதி ஆசைவார்த்தை கூறி நித்தியானந்தத்தை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதனை நம்பி தொழில் அதிபர் நித்தியானந்தமும் அங்கு சென்றார். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளார்கள். அப்போது அங்கு வந்த பானுமதியின் கூட்டாளிகள் 4 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து நித்தியானந்தமிடம், 'எதற்காக இங்கு வந்தாய்?' என்று கூறி மிரட்டி, அவரை வீட்டில் உள்ள அறையில் அடைத்துள்ளார்கள்

அப்போது தொழில் அதிபர் நித்தியானந்தம் பயந்து போய் இருந்தார். அவரிடம் கழுத்தில அணிந்து இருந்த 2½ பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை மிரட்டி பறித்தனர். அத்துடன் நித்தியானந்தமின் செல்போன் வங்கி செயலி மூலமாக ரூ.75 ஆயிரத்தை உடனடியாக பறித்துள்ளனர். பின்னர் அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி சென்று, பின் நம்பரை மிரட்டி வாங்கிக்கொண்டு அதன் மூலமாக ரூ.60 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் நித்தியானந்தத்தை காரில் கடத்தி சென்று, நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தங்களுக்கு பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். நித்தியானந்தத்திடம் அவரது வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று, ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்துள்ளார்கள்

அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நித்தியானந்தம் தன்னிடம் வேலை செய்யும் நபரிடம் செல்போனில் எப்படியோ போராடி தெரிவித்தார். உடனே அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார் தெரிவித்தார். உடனே நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

தொழில் அதிபர் நித்தியானந்தத்தை கடத்தி நகை-பணம் பறித்த பானுமதியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட நித்தியானந்தத்தையும் மீட்டனர். அவரை கடத்தி நகை-பணம் பறித்ததாக பானுமதியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (46), வெள்ளத்துரை (42), ரஞ்சித் (42), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுடலை (40) ஆகியோரையும் கைது செய்தார்கள்.

திருநெல்வேலி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பானுமதி என்பவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை பிரிந்து, பள்ளி தோழரான வெள்ளத்துரையுடன் நெல்லையில் குடியேறி உள்ளார். பானுமதிக்கு ஆடம்பரமாக வாழ ஆசை வந்துள்ளது.. அதற்காக கடந்த 6 ஆண்டுகளாக பேஸ்புக்கில் தொழில் அதிபர்களிடம் ஆசைவார்த்தை பேசி தங்களது வலையில் வீழ்த்தி பணம் பறித்து வந்துள்ளார். இதற்கு பார்த்தசாரதி, ரஞ்சித், சுடலை ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளார்கள்..

தொழில் அதிபர்களை வலையில் வீழ்த்தி தனிமையில் ஜாலியாக இருக்கும்,திடீரென அங்கு வரும் பானுமதியின் கூட்டாளிகள், அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்கள். வெளியில் சொன்னால் அவமானம் என்று பயந்து யாரும் புகார் அளிக்கவில்லை. இது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. தொடர்ந்து இப்படி பணம் சம்பாதித்து வந்துள்ளனர். கடைசியாக நடந்த முயற்சியில் சிக்கலாகி போலீசிடம் வசமாக சிக்கி உள்ளனர்.

இதனிடையே பானுமதியின் வீட்டில் சோதனை செய்தபோது விமான டிக்கெட்டுகள் இருந்தது. இதுபற்றி நடத்திய விசாரணையில், தொழில் அதிபர்களிடம் இருந்து பறிக்கும் பணத்தை பானுமதி உள்ளிட்ட 5 பேரும் பங்கு போட்டு வந்துள்ளனர். அந்த பணத்தில் பானுமதியின் கூட்டாளிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்களாம்.

பணம் தீர்ந்த பின்னர் பானுமதி உதவியுடன் அடுத்த தொழில் அதிபர்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்து உள்ளனர். இதற்குமுன் சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை நெல்லைக்கு வரவழைத்து அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.5.30 லட்சம், 7 பவுன் தங்க நகைகளை பறித்துள்ளார்களாம். இதுபோல் தமிழகம் முழுவதும் பலரிடம் அந்த கும்பல் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+