‛தேவர் மகன்’ கருத்து: சாதி மோதலை தூண்டுகிறார்! போலீசுக்கு போன புகார்! மாரி செல்வராஜுக்கு சிக்கல்?
திருநெல்வேலி: ‛மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் ‛தேவர் மகன்' திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன. இந்நிலையில் தான் சாதி மோதலை இயக்குனர் மாரி தூண்டுகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கி உள்ளார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேல், பஹத் பாசில் உள்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடத்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் வடிவேல் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது 'தேவர் மகன்' திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன.
மாரி செல்வராஜ் பேசுகையில், ‛‛மாமன்னன் படம் உருவாக காரணம் தேவர் மகன் தான். ‛தேவர் மகன்' பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. இன்று 'தேவர் மகன்' என்பது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக். அனைத்து இயக்குனர்களும் தேவர்மகன் படத்தை பார்த்துவிட்டு படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான் படம் எடுக்கிறேன்.
ஆனாலும் 'தேவர் மகன்' எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். இந்த 'தேவர் மகன்' உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் 'மாமன்னன்'. வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் 'மாமன்னன்'. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்' என்றார்.
இயக்குனர் மாரி செல்வராஜுன் இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் எதிர்மறையான கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது ‛தேவர் மகன்' குறித்த மாரி செல்வராஜுன் இந்த கருத்து பெரும் விவாத பொருளாகவே மாறியுள்ளது. இந்நிலையில் தான் இயக்குனர் மாரி செல்வராஜ் மீது போலீசில் பரபரப்பான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் பவானி வேல்முருகன் என்பவர் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ‛‛தேவர் மகன் திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் தவறாக பேசி வருகிறார். தமிழகம் அமைதி பூங்காக உள்ள நிலையில் சாதி மோதலை தூண்டும் விதமாக திரைப்படம் எடுத்து வருகிறார். விமர்சனம் என்ற பெயரில் இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் மாரி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications