திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பா? நெல்லையில் ஷாக்.. “பொறுமைக்கும் எல்லை உண்டு”.. சீறிய அண்ணாமலை!
நெல்லை: திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு என்பது இத்தனை ஆண்டு கால வரலாறாக இருக்கலாம், ஆனால் பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் திமுக நிர்வாகியான பேச்சிப் பாண்டியன் என்பவர் மற்றொருவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், திமுக அரசு அவரை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான பேச்சி பாண்டியன் எனும் நபர், இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து, அதனை எதிர்த்த நில உரிமையாளர்கள் தந்தை, மகன் இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இவரது தாக்குதலில் காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், நிலத்தின் உரிமையாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய பேச்சி பாண்டியன் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகிறது திமுக. இவர் மீது மேலும் பல நில ஆக்கிரமிப்புப் புகார்கள் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும், சட்டத்திற்குப் பயப்படாமல் தொடர்ந்து சமூக விரோதச் செயல்களை செய்யும் தைரியம் இவருக்கு எங்கிருந்து வருகிறது? உடனடியாக, காவல்துறை இந்த நபரைக் கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு என்பது இத்தனை ஆண்டு கால வரலாறாக இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் உள்ள திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பேச்சி பாண்டியன் எனும் நபர், இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து, அதனை எதிர்த்த நில உரிமையாளர்கள் தந்தை, மகன் இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார். இவரது… pic.twitter.com/ma76FqouJN
— K.Annamalai (@annamalai_k) August 26, 2023
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு










Click it and Unblock the Notifications