சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் எப்போது தொடங்குகிறது? கட்டணம் எவ்வளவு தெரியுமா?
நெல்லை: நெல்லைக்கு விரைவில் வரும் வந்தே பாரத் ரயிலின் கட்டணம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கட்டணம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இந்த ரயிலில் வேகம் அதிகமாக இருக்கும். புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும்.

இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி, எல்லாவற்றுக்கும் மேல் பாதுகாப்பு இருக்கிறது. தொலைதூர ஊர்களுக்கு இந்த வந்தே பாரத் ரயில் வரப்பிரசாதம் ஆகும்.
உதாரணமாக சென்னையில் இருந்து கோவை செல்ல ரயிலில் குறைந்தது 8 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5.30 மணி நேரம்தான் ஆகும். இது போல் முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது.
அதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அண்மையில் மத்திய அமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். அதுகுறித்து கால அட்டவணை ஒன்று சமூகவலைதளங்களில் ஷேராகி வருகிறது. அதில் ரயில் நெல்லையிலிருந்து காலை புறப்பட்டு மதியம் சென்னை சென்றுவிட்டு மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு நெல்லை சேரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளததை 1330 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய இரு வகுப்புகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏசி சேர் கார் பயண கட்டணம் ரூ 3000 வரை இருக்கலாம் என தெரிகிறது. எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் அல்லது 1500 ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உணவும் வழங்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயிலின்பராமரிப்பு பணிகள் இந்த ஜூலை மாதம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications