"தாம்பத்யம்".. ராத்திரி குலுங்கி குலுங்கி அழுத நயினார்.. அதென்ன கையில் போட்டோ.. எட்டிப்பார்த்த மனைவி
மனைவி போட்டோவை பார்த்து பார்த்து கதறி அழுத தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
திருநெல்வேலி: நடுராத்திரி, கையில் அந்த போட்டோவை வைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாராம் நயினார்.. இதை பார்த்து கொந்தளித்து போயுள்ளார் மனைவி.. அடுத்து நடந்த பயங்கரம் என்ன தெரியுமா?
நெல்லை அருகே பழைய பேட்டை சர்தார்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் நயினார்.. 40 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார்.. மனைவி பெயர் விஜயலட்சுமி.. இந்த தம்பதிக்கு சரண்யா என்ற 17 வயதில் ஒரு மகளும் உண்டு.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடுகள் முளைத்தன.. இதனால், தம்பதிக்குள் நிறைய தகராறுகள் வெடிக்க துவங்கின.

தாம்பத்யம்
இத்தனை வருடமும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தநிலையில், திடீரென தன்னை கணவன் சரியாக புரிந்து கொள்ளாமல் போய்விட்டாரே என்று மனவேதனைப்பட்டார் விஜயலட்சுமி.. இதனால், மனம் வெறுப்பாகி, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, மகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு, பிரிந்து சென்று விட்டார்.. இதனால் நயினார் மட்டும் தனியாக வசித்து வந்தார்.. அப்போது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மகேஷ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.. இந்த மகேஷ் என்ற பெண்ணும் திருமணமானவர்தான்.. அவர் கணவர் பெயர் மாரியப்பன்.. ஆனால், கடந்த 4 வருடங்களுக்கு முன்பே மாரியப்பன் இறந்து விட்டார்.

மிட்நைட் நயினார்
மகேஷ் அந்த வீட்டில் தனியாகவும், நயினார் இந்த வீட்டில் தனியாகவும் வாழ்ந்து வந்த நிலையில், 2 பேருக்கும் தொடர்பு ஏற்பட்டு, பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.. ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கலாம் என்று நினைத்தும் திருமணம் செய்து கொண்டனர்.. ஆனால், மகேஷூக்கும், நயினாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வெடித்தது.. இதனால், நயினார் மனம் நொந்து போனதாக தெரிகிறது.. நேற்று முன்தினம், நடுராத்திரி, நயினார் தன்னுடைய கையில் ஒரு பெண்ணின் போட்டோவை வைத்துக்கொண்டு, அதை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தாராம்.

நயினார் சேலை
இதை பார்த்த 2வது மனைவி மகேஷ், அது யாருடைய போட்டோ என்பதை கவனித்துள்ளார்.. பிறகுதான் தெரிந்தது, அது முதல் மனைவி விஜயலட்சுமியின் போட்டோவாம்.. அவரது போட்டோவை பார்த்து அழுது கொண்டிருக்கவும், மகேஷூக்கு கோபம் வந்துள்ளது.. மறுபடியும் இந்த விஷயத்தில் தகராறு வெடித்துள்ளது.. இதில், மனம் உடைந்த நயினார், சேலையால் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

மிஸ் பண்ணிட்டேனே
கணவனை விட்டு பிரிந்து சென்ற விஜயலட்சுமி, அதே தெருவில்தான், தனியாக வீடு எடுத்து வசித்துவருகிறாராம்.. அப்படி இருந்தும்தான், மகேஷை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. ஆனால், 2வது மனைவி சண்டை போடும்போதெல்லாம், முதல் மனைவியே தேவலாம் என்று நினைத்து கலங்குவாராம் நயினார்.. அதனால்தான், எப்போதுமே மகேஷூடன் தகராறு நடக்கும்போதெல்லாம் முதல் மனைவியின் பெயரை சொல்லி சொல்லி காட்டுவாராம்.. அதேபோல, எப்போதுமே விஜயலட்சுமியின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு, 2வது திருமணத்தில்தான் தனக்கு நிம்மதி பறிபோய்விட்டது என்று பலரிடமும் புலம்பி கொண்டே இருந்தாராம்.. முதல் மனைவியை புறந்தள்ளி, 2வது திருமணம் செய்தவர், முதல் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications