ஏன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தேன் தெரியுமா? திமுகவில் என்ன நடந்தது? மனம் திறந்த வசந்தி முருகேசன்!
நெல்லை: தென்காசி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் திமுகவில் சேர்ந்து 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டார்.
2 ஆண்டுகள் கூட திமுகவில் இருக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டது என்பது பற்றி அறிய அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

''அம்மா தான் எனக்கு எம்.பி.சீட் கொடுத்து அரசியலில் முகவரி அளித்தார். ஏதோ ஒரு முடிவில் நான் திமுகவில் இணைந்தாலும் கூட, எனக்கு மன உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது. திமுகவில் இருந்த இரண்டு ஆண்டு காலமும் மன உறுத்தலோடு தான் இருந்து வந்தேன். மனமாற நான் திமுகவில் இருக்கவில்லை. இப்போது தான் மன நிம்மதியோடு இருக்கிறேன்.''
''எடப்பாடி பழனிசாமி அண்ணன் சந்தோஷமாக வரவேற்றார், மீண்டும் நல்ல முறையில் கட்சிபணியாற்றும் படி கேட்டுக்கொண்டார். நான் மீண்டும் எம்.பி. சீட் எதிர்பார்த்தோ, கட்சிப் பதவியை எதிர்பார்த்தோ அதிமுகவில் சேரவில்லை. மன பாரத்தை குறைக்கவே தாய் கழகத்தில் இணைந்தேன். திமுகவை பொறுத்தவரை எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி விமர்சிக்க ஒன்றுமில்லை.''
''திமுகவில் லோக்கலில் தான் கோஷ்டிப் பூசல் அதிகம் இருக்கிறது. இதனால் தான் இனியும் திமுகவில் பயணிக்க மனமின்றி அதிமுகவுக்கு திரும்பிவிட்டேன். இந்தச் சூழலில் மேற்கொண்டு திமுகவை பற்றி குறை சொன்னால் அது நல்லாயிருக்காது. இப்போது தான் அதிமுகவுக்கு வந்திருக்கிறேன். பிறகு பேசுகிறேன் விரிவாக.'' எனக் கூறினார் வசந்தி முருகேசன்.
வசந்தி முருகேசனை பொறுத்தவரை கடந்த 2014 முதல் 2019 வரை தென்காசி தொகுதி எம்.பியாக இருந்தவர். தென்காசியில் போட்டியிட்டாலும் இவர் வசிப்பது, அரசியல் செய்வது எல்லாமே நெல்லையில் தான்.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications