எடப்பாடி பழனிசாமியின் குணமே துரோகம் செய்வதுதான்.. அப்பவும் இப்பவும் இதேதான்.. டிடிவி தினகரன் தாக்கு!
நெல்லை: துரோகம் செய்வது தான் எடப்பாடி பழனிசாமியின் இயற்கையான சுபாவம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் இன்று அமமுக கழக மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி இல்ல திருமண விழாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். அப்போது யாருடன் கூட்டணி என்று தெரியவரும். கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளோம. மக்களை ஏமாற்றுவதுதான் 3 ஆண்டுகால திமுக ஆட்சியின் செயல்பாடாக இருக்கிறது.
அமமுக, அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. அதிமுகவில் இருக்கக்கூடிய ஸ்லீப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு இப்போது எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார்.
பாஜகவுடன் இருந்து எல்லா பலனையும் அனுபவித்துவிட்டு தேர்தல் நேரத்தில் துரோகம் செய்துள்ளார். ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கு துரோகம் செய்தார். இப்போது, ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவுக்கும் துரோகம் செய்துள்ளார். துரோகம் செய்வது தான் எடப்பாடி பழனிசாமியின் இயற்கையான சுபாவம்" என விமர்சித்தார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் ஏற்றுக்கொள்வது மக்களின் கையில் தான் உள்ளது" எனத் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். பாஜக மேலிடத்துடன் தினகரன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதைத் தொடர்ந்து, பாஜக தமிழ்நாட்டில் அமைக்கப்போகும் புது கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைய உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications