வயது போதாது! போய் படிங்கம்மா! அமமுக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி!
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அமமுக வேட்பாளருக்கு தேர்தலில் போட்டியிட வயது போதாது எனக் கூறி, தேர்தல் அதிகாரியால் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.
இதனால் ஆசை ஆசையாய் தேர்தலில் போட்டியிடும் கனவுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற கல்லூரி மாணவியான இளம் பெண் வேட்பாளர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
இதனிடையே கடையநல்லூரில் அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிடக் கூட வேட்பாளர்களை தேடிப்பிடிக்க வேண்டிய நிலை இருப்பதாக உள்ளூர் மாற்றுக்கட்சியினர் கிண்டல் செய்திருக்கின்றனர்.

தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 28-வது வார்டில் அமமுக சார்பில் கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். குக்கர் சின்னத்தில் வீடு வீடாக ஓட்டுக் கேட்டு வந்த அவர், நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட அதிகாரி, வேட்புமனுவை பார்த்த போது அதில் வேட்பாளரின் வயது 21 க்கும் குறைவாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

வயது போதாது
இதையடுத்து அந்த இளம் பெண் வேட்பாளரிடம் நீங்க என்னம்மா செய்றீங்க என தேர்தல் அதிகாரி வினவியிருக்கிறார். அதற்கு பதிலளித்த அந்த வேட்பாளர், தாம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக கூறியிருக்கிறார். 21 வயதில் தான் தேர்தலில் நிற்க முடியும் என விவரத்தை எடுத்துக் கூறிய அந்த அதிகாரி, அந்த இளம் பெண் வேட்பாளரை திருப்பி அனுப்பினார். இதனிடையே அவருடன் வேட்புமனுத் தாக்கலுக்கு உடன் சென்றிருந்த அமமுக நிர்வாகிகள் ஏதேதோ காரணங்கள் கூறினர்.

தேர்தல் விதிமுறை
ஆனால் தேர்தல் விதிமுறைப்படி அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்த தேர்தல் அதிகாரி அவர்களையும் திருப்பி அனுப்பினார். அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்குவதே இது போன்று வேட்பாளர்களை நிறுத்த காரணமாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் வாக்கு வங்கி அதிகம் உள்ள நகராட்சி கடையநல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல இடங்களில்
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான இளம்வேட்பாளர்கள் திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் இந்த தேர்தலில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வாக்களிக்க 18 வயதும் போட்டியிட 21 வயதும் தகுதி என்பது கவனிக்கத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications