''அண்ணன் எடப்பாடியை விட்டால் இந்த நாட்டை காப்பாற்ற ஆளில்லை''! மாஜி அமைச்சர் வளர்மதி வைத்த ஐஸ்!
நெல்லை: ''அண்ணன் எடப்பாடியை விட்டால் இந்த நாட்டை காப்பாற்ற ஆளில்லை'' என பேசியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி.
அவர் இவ்வாறு பேசும் போது மேடைக்கு கீழே இருந்த பலரும் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. ஐஸ் வைத்து பேசலாம், அதற்காக இப்படியா என வளர்மதி பேச்சு குறித்து அதிமுகவினரே கமெண்ட் அடித்துக் கொண்டனர்.

எம்.ஜி.ஆரிடமும், ஜெயலலிதாவிடமும் அரசியல் பாடம் பயின்றவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் பேசவிருக்கும் வீர உரையை கேட்பதற்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவினர் மதுரை மாநாட்டில் அலை கடலாக பங்கேற்க வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் வளர்மதி.
நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார். எதிரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசவிருப்பதாகவும் அவரது உரையை கேட்பதற்கு மாநாட்டிற்கு வர வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் போது அவரது முகத்தை மட்டும் பார்க்கக் கூடாது என்றும் அவர் சந்தித்து வந்த சோதனைகள், பட்ட காயங்கள் பற்றியும் பார்க்க வேண்டும் என பூஸ்ட் அப் கொடுத்தார் வளர்மதி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை சின்னம்மா என அழைத்து அவரது தலைமையை ஏற்க போயஸ் கார்டனில் முதல் ஆளாக நின்றவர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி தலைமையை இவர் ஏற்றதால் இவருக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது ஊரெங்கும் எடப்பாடி பழனிசாமியின் புகழ் புராணம் பாடி வருகிறார். அதிமுக மாநாடுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளதால் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகள் விசிட் அடித்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications