திருமணத்தை மீறிய உறவு.. நெல்லையில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்
நெல்லை: நெல்லை டவுனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த இளைஞரை 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த கொலை தொடர்பாக அவரது கள்ளக்காதலியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த 35 வயதாகும் முகம்மது அசாருதீன் என்பவர் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் செவ்வாய்கிழமை இன்று நின்று கொண்டிருந்த முகம்மது அசாருதீனை 3 பேர் கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பேட்டை போலீசார் அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று விசாரித்த போது, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லையில் சூப்பர் மார்க்கெட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்செய்து முகம்மது அசாருதீனுக்கும், அவரது சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த மகாராஜன் என்பவரது மனைவி பகவதிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை மகாராஜன் கண்டித்ததால், பகவதி வீட்டை விட்டு வெளியேறி அசாருதீன் ஏற்பாட்டில் பேட்டை வி.வி.கே. தெருவில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
தன் மனைவியை அபகரித்த முகம்மது அசாருதீனை கொலை செய்ய வேண்டும் என்று பகவதியின் கணவரான டிரைவர் மகாராஜன் திட்டம் தீட்டினார். இதையடுத்து டவுனை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் செல்வம், மற்றொரு நண்பருடன் சேர்ந்து மகாராஜன் நேற்று இரவு வி.வி.கே. தெருவிற்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் பகவதியிடம் முகம்மது அசாருதீன் பேசிக்கொண்டிருந்த நிலையில், தன் மனைவி கண் முன்னாலேயே மகாராஜன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அசாருதீனை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார் என்பது தெரியவந்தது.
மேலும் மகாராஜனுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட செல்வத்திற்கும், முகம்மது அசாருதீன் மீது பகை இருந்துள்ளது. செல்வத்தின் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கி தருவதாக அசாருதீன் ஏமாற்றி உள்ளார். மேலும் செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் அசாருதீன் பணம் பெற்றும் மோசடி செய்தார். அந்த விவகாரத்தில் செல்வம் சமீபத்தில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். இதனால் தான் மகாராஜன் மற்றும் செல்வம் இணைந்து நண்பர்களுடன் அசாருதீனை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மகாராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை டவுன் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39), பாளை சிவந்திபட்டி நடுத்தெருவை சேர்ந்த மூர்த்தி என்ற கார்த்திகேயன் (24), பாளை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (25), சபரி மணி (23) ஆகிய 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications