கூகுள் மேப் ஜிபிஎஸ்.. "அப்பட்டமாக" தெரிந்த உருவம்.. திருநெல்வேலியில் காருக்குள் யாரு? அதிரும் நெல்லை
திருநெல்வேலி: திருநெல்வேலியில் வித்தியாசமான ஒரு மோசடி ஒன்று நடந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஹவுசிங் போர்டு என்ற இடத்தில் வசித்து வருகிறார் ரமேஷ்... இவர் மெடிக்கல் ரெப்ரெசன்டேட்டிவ்வாக வேலை பார்த்து வருகிறார்..

டிராவல்ஸ்: இவர் தன்னுடைய நண்பர்களிடம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாத வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அதாவது, டிராவல்ஸ்களில் எடுக்கப்படும் கார்களுக்கு நிறைய வாடகை சொல்வதால், சொந்த வாகனங்களை வைத்திருப்பவரிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடகைக்கு கார்களை வாங்குவதாக சொல்லி உள்ளார்.
இதற்காக தினமும், அந்த கார்களுக்கு வாடகைகளை கார்ப்பரேட் நிறுவனங்களே தந்துவிடுவதாகவும் சொல்லி உள்ளார்.. ரமேஷ் இப்படி சொல்லியதை கேட்டு, அவரது நண்பர்கள் வாடகைக்கு தங்களது சொந்த கார்களை தந்துள்ளனர்.
வாடகை கார்: குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 34 பேர், தங்களுடைய இன்னோவா கிரிஸ்டா, ஷிப்ட் டிசையர், கிளன்ஸா, டிரைபர் போன்ற காஸ்ட்ரி கார்களை வாடகைக்கு தந்திருக்கிறார்கள்.. இந்த கார்களை பெற்றுக்கொண்ட ரமேஷ், கன்னியாகுமரியில் மணிகண்டன் என்பவருக்கு வாடகைக்கு விட்டு பணம் வாங்கி தருவதாக சொன்னார். முதலில் 2 மாதங்களுக்கு, ரூ.1000 முதல் ரூ.15000 வரை கார்களுக்கான வாடகையை தந்துள்ளார் ரமேஷ்..
ஆனால், அதற்கு பிறகு வாடகையும் வரவில்லை.. அந்த கார்களும் என்ன ஆனது என்று தெரியவில்லை.. நண்பர் ரமேஷையும் காணோம். இதனால், கார்களை தந்தவர்கள் எல்லாருமே பதறிப்போய்விட்டார்கள்.
வாடகை கார்: ரமேஷூக்கு போனை போட்டாலும் எடுக்கவில்லை.. கார்களை வாடகைக்கு விட்ட மணிகண்டன் என்பவருக்கு போனை போட்டாலும் எடுக்கவில்லை.. இதனால், தங்களது கார்கள் எங்கே இருக்கின்றன என்று தேடும் பணியில் அந்தந்த ஓனர்கள் ஈடுபட்டார்கள்.
சில கார் உரிமையாளர்கள், தங்களது காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி மூலம் தேடினார்கள்.. அப்போதுதான், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தங்களது கார்கள் இருப்பதை அறிந்தனர்.. எனவே, அங்கு விரைந்து சென்று காரை திருப்பி கேட்டிருக்கிறார்கள்.
ரமேஷ்: அதற்கு அவர்கள், தங்களிடம் கார்களை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் ரமேஷ் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை எல்லாம் தந்துவிட்டு அவரவர் கார்களை எடுத்து செல்லும்படியும் சொல்லி உள்ளார்கள்.. இதைக்கேட்டு கார் ஓனர்கள் இன்னும் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும், ஒரு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கார், நெல்லை சந்திப்பு போலீஸ் ஸ்டேஷனையும் கடந்து, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நின்றிருப்பதை, அதன் ஓனர் கண்டறிந்து ஆவேசம் ஆனார்,.
இதற்கு பிறகு, வேறு வழியின்றி எல்லா கார் ஓனர்களும் சேர்ந்து, நெல்லை கமிஷனர் ஆபீசுக்கு சென்றார்கள்.. தங்களது கார்களில் நடந்த மோசடி குறித்து புகார் தந்தனர்.. அத்துடன், நண்பர் ரமேஷையும் அள்ளிக்கொண்டு போய் போலீசாரிடம் நிறுத்தினார்கள். இதையடுத்து போலீஸார் ரமேஷிடம் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
பரபரப்பு: அத்துடன், தனியார் மருத்துவமனை அருகே நின்றிருந்த காரையும் போலீசார் மீட்டனர்.. ஜிபிஎஸ் மூலம் கார் பறிமுதல் செய்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்துவருகிறது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள, 34 காஸ்ட்லி கார்களும் எங்கே இருக்கின்றன என்று தெரியாதது அதற்குமேல் பரபரப்பை தந்து வருகிறது..!!












Click it and Unblock the Notifications