1 ஆடு.. குஷியில் கறிக்கடைக்காரர்கள்.. செவ்வாய்க்கிழமை 'கரிநாள்' வருதே.. மிரளும் நெல்லை மேலப்பாளையம்
திருநெல்வேலி: ஒரு ஆடு விலை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.. அந்த அளவுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை தமிழக சந்தைகளில் களை கட்டி வருகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.. பொங்கல் பண்டிகையின் மறுநாள் மாட்டுப்பொங்கல், அடுத்து காணும் பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் கொண்டாடப்படும்.

பொங்கல் பண்டிகை: அதனால், பொங்கலை கொண்டாடிய மறுநாளே, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகளை மக்கள் சமைத்து, தங்கள் ஊற்றார், உறவினருடன் சேர்ந்து உண்பது வழக்கமான ஒன்றாகும். எனவே, தமிழகத்தின் பிரதான சந்தைகளில் ஆடுகள் விற்பனையும் களைகட்ட துவங்கிவிடும்.
அந்தவகையில், நெல்லை மேலப்பாளையம் சந்தையும் ஒன்றாகும்.. வழக்கமாக, எந்த பண்டிகை என்றாலும், மேலப்பாளையம் சந்தை பரபரப்பாக பேசப்படும்.. காரணம், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை புகழ்பெற்ற சந்தையாக விளங்கி கொண்டிருக்கிறது. அப்படித்தான், நேற்றைய தினமும், மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை களை கட்டியது.
ஆடு விற்பனை: ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தபடியே இருந்தனர்.. கரிநாளான மாட்டு பொங்கல் தினத்தன்று சமைப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பேயே மேலப்பாளையம் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். விற்பனைக்கு ஏகப்பட்ட ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தார்கள்..
செம்மறி ஆடு, வெள்ளாடுகள் என்று பலவகையான ஆடுகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், இவைகளில் வெள்ளாடுகளுக்குதான் நிறைய கிராக்கி இருந்ததாம்.. ஒவ்வொரு வெள்ளாடுகளின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது... கறியின் எடை அதிகமாக இருந்தால், அதற்கேற்ற விலையும் கணிசமாக உயர்த்தி விற்கப்பட்டது..
டோக்கன்கள்: ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது.. ஆடுகளை சந்தைக்குள் கொண்டு செல்வதற்காகவே, மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. அதாவது, 50 ரூபாய் டோக்கன் வாங்கி, சுமார் 2200 ஆடுகள் விற்பனைக்கு வந்தது.. இதன் வியாபார மொத்த மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என்கிறார்கள். ஆனால், இது கடந்த வருடத்தைவிடவும் குறைவு.
மேலப்பாளையத்தை பொறுத்தவரை, ரூ.3 கோடிக்கும் மேல் பொங்கலுக்கு வியாபாரம் நடப்பது வழக்கம்.. ஆனால், இந்த முறை வியாபாரம் குறைவுதானாம். காரணம், ஆடுகளை, ஒரு வாரம் வரை பராமரிப்பில் வைத்திருந்து பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் கோவில்களுக்கு மாலை அணிந்தவர்களும் உண்டு.. பொதுமக்களும் இயல்பாகவே செவ்வாய்க்கிழமைகளில் இறைச்சியை தவிர்ப்பார்கள்..

சாரல் மழை: நேற்று சாரல் மழை பெய்தபடியே இருந்தது.. போதாக்குறைக்கு பஸ் ஸ்டிரைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் எதிர்பார்த்த கூட்டம் இல்லையாம். அதுமட்டுமல்ல, கார்த்திகை, மார்கழி மாதங்களிலும் ஆடுகள் விற்பனை அவ்வளவாக இருக்காது..
மேலும், இந்த வருடம் கரிநாள் செவ்வாய்கிழமையன்று வருகிறது., தை பூசமும் வரப்போகிறது. இதன்காரணமாக சிலர் அசைவம் உண்ணுவதை தவிர்க்க கூடும் என தெரிகிறது. அதனால், கறி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்று சந்தேகம்தான் என்கிறார்கள் சந்தேகம் கறிக்கடைக்காரர்கள்..!!!












Click it and Unblock the Notifications