ஆலங்குளம்.. மனோஜ் பாண்டியன் வெற்றி.. பூங்கோதை 2வது இடம்.. அமோக வாக்குகளை அள்ளி ஹரி நாடார் 3வது இடம்
நெல்லை: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான பூங்கோதை ஆலடி அருணாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் 3வது இடம் பிடித்துள்ளார்.
ஆலங்குளம் தொகுதி விஐபி அந்தஸ்து பெற்று உள்ளது. இதற்கு காரணம் அதிமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகனும் பிரபல வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் போட்டியிட்டார்.
திமுக தரப்பில் சிட்டிங் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா களம் கண்டார். இந்த நிலையில்தான் பனங்காட்டு படை கட்சி ஹரிநாடார் அங்கு போட்டியிட முடிவு செய்தார்.

கழுத்து நிறைய நகை
கழுத்து நிறைய நகை அணிந்தபடி அவர் செய்யும் பிரச்சாரத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், வெறுமனே நகைகளை பார்க்க வந்த கூட்டம் அல்ல, அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் வண்ணம் அமைந்து விட்டன.

மதியம் நிலவரம்
மதியம் 3 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குகள் அடிப்படையில் பார்த்தால் ஹரிநாடார், 14680 வாக்குகளை பெற்றிருந்தார். முதலிடத்தில் உள்ள மனோஜ் பாண்டியன் 15785 வாக்குகள் பெற்றிருந்தார்.

மனோஜ் பாண்டியன் வெற்றி
14136 வாக்குகளைப்பெற்று பூங்கோதை ஆலடி அருணா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். ஆனால் பிறகு டிரெண்ட் மாறியது. பூங்கோதை ஆலடி அருணா 70,380 வாக்குகளும், மனோஜ் பாண்டியன் 73,985 வாக்குகளும் பெற்றனர். 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் மனோஜ் பாண்டியன் வென்றார்.

ஹரி நாடார் அமோகம்
இங்கு நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பிடித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் தேமுதிக இங்கு போட்டியிட்டது. அந்த கட்சி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வெப்சைட் சுயேச்சை என்று குறிப்பிடும் ஹரி நாடார், இந்த அளவுக்கு பெரிய கட்சிகளுக்கு போட்டி கொடுத்துள்ளார். ஹரி நாடார் 37,632 வாக்குகளைப் பெற்றுள்ளார். எனவே 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications