தாமிரபரணியில் தாறுமாறு வெள்ளம்..குறுக்குத்துறை முருகன் கோவிலே மூழ்கிருச்சு! இன்னும் சம்பவம் இருக்கு!
நெல்லை: தமிழகத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வரும் நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. திருநெல்வேலியில் தொடர்ந்து விடாமல் பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
திருநெல்வேலியில் மட்டும் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பதிவாகி வருகிறது. இன்று காலை 8 மணிவரை 24 மணிநேரத்தில் ஊத்து பகுதியில் 232 மில்லிமீட்டர் என்ற மிக அதிக மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 220 மில்லி., காக்காச்சி 210 மில்லி., மாஞ்சோலை 190 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த அளவுக்கு குறுகிய நேரத்தில் கனமழை பெய்திருப்பது தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்தை திடீரென அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 143 அடி கொள்ளளவுக்கு எதிராக 129.55 அடியாக உயர்ந்துள்ளது. விநாடிக்கு 7,308 கனஅடி நீர் அணைக்குள் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பதால் 2,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நெல்லை கனமழை
அதேபோல், மணிமுத்தாறு அணைக்கும் 4,301 கனஅடி நீர் வந்தடைகிறது. 118 அடி கொள்ளளவுடைய இந்த அணையின் நீர்மட்டம் 103.05 அடியை தொட்டுள்ளது. நிலைமைக்கு ஏற்ப 480 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மழை தீவிரம் காரணமாக மட்டுமே அல்ல, காட்டாற்றுகளில் ஏற்பட்ட வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டத்தை திடீரென உயர்த்தியுள்ளது. சில பகுதிகளில் ஆற்றின் ஓட்டம் அபாயகரமாக அதிகரித்திருக்கிறது.
குறுக்குத்துறை முருகன் கோவில்
திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயில் கோபுரம் வரை தண்ணீர் பாய்ந்து சென்றது அங்கு நிலைமையின் தீவிரத்தை கடுமையை காட்டுகிறது. கோயிலுக்கு செல்லும் கல்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் அப்பகுதி செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலப்பாளையம் - மேலநத்தம் தரைப்பாலத்திலும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல், மலாக்கா ஜலசந்தி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் மூன்று வேறு சுழற்சிகள் உருவாகி, ஒன்றை ஒன்று தாக்கம் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. மலேசியா அருகே இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மீண்டும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம். அடுத்த 48 மணி நேரத்தில் இது தெற்கு வங்கக்கடலில் புயல் வடிவம் எடுக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல், குமரிக்கடல் அருகே இன்னொரு தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நெல்லை வெள்ள எச்சரிக்கை
இந்த மூன்று அமைப்புகளும் தொடர்பு உள்ளதால், தமிழகத்தில் அடுத்த சில நாட்களும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை இருக்கும். 29, 30 தேதிகளில் வட கடலோரப் பகுதிகளில் மழை கொஞ்சம் அதிகமாக பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், அடுத்த சில நாட்கள் தென் தமிழ்நாடு முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications