விடை பெறுகிறது மாஞ்சோலை என்னும் சகாப்தம்.. கல்நெஞ்சையும் கரைக்கும் வரலாறு
திருநெல்வேலி: சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான மாஞ்சோலை வனப்பகுதி, மணிமுத்தாறுக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிக அழகான தேயிலை தோட்டம். திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது. அழகான மாஞ்சோலையின் வரலாறு கல்நெஞ்சையும் கரைத்துவிடும்.
என்ன சார் பெரிய ஊட்டி, கொடைக்கானல், மாஞ்சோலை போயிருக்கீங்களா சார்.. என்று திருநெல்வேலி சீமையில் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் அடையாளத்தை பற்றி பேசும் போது, உடல் அவர்களை அறியால் புல்லரிக்கும்.. தங்கள் கை கால்கள் உள்ள முடிகள் ஒருமுறை சிலிர்த்து உணர்ச்சி மேலிடும்.. அந்த அளவிற்கு அவர்களின் உணர்வோடு கலந்த இடம்..

உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஏலகிரி போன்ற மலை பிரசேதங்கள் சுற்றுலாத் தலங்களாக அறியப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மாஞ்சேலை, மேகமலை, வால்பாறை போன்ற இடங்கள், சுற்றுலா தலங்களா ஆரம்பத்தில் அறியப்படவில்லை. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வனப்பகுதியாகவே அறியப்பட்டவை. அடர்ந்த வனப்பகுதியில் சில்லென்ற சீதோஷன நிலையை பார்த்த வெள்ளைக்கார்கள் தேயிலை தோட்டங்களை நமது மூதாதையர்களை வைத்து உருவாக்கினார்கள்.
தேனி கண்டமனூர் ஜாமீன் வசம் இருந்த மேகலையும், திருநெல்வேலி சிங்கம்பட்டி ஜாமீன் வசம் இருந்த மாஞ்சோலையும் தனித்துவம் ஆனது.காரணம் இரண்டுமே இன்று வரை சுற்றுலா தலமாக முழுமையாக மாறவில்லை.. மேகமலை கூட சுற்றுலா பயணிகள் சென்று வர ஓரளவு வசதிகள் உள்ளன. ஆனால் மாஞ்சோலை அப்படி இல்லை.. முற்றிலும் மாறுப்பட்டது.. இயற்கை அப்படியே இருக்கும் பகுதியாகும். அதன் அழகை பார்த்து பிரம்மிக்காதவர்களே இல்லை. வாழ்வில் ஒருமுறையாவது போக வேண்டிய இடம் ஆகும். தாமிரபரணியின் பிறப்பிடமான இந்த இடம் சாதாரணமானது அல்ல.. மூலிகைகளும், மலைகளும் நிறைந்த பகுதியாகும்.
திருநெல்வேலி நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியிலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. இருசக்கர வாகனத்திலும் போக முடியாது. காரில் மட்டுமே போக முடியும். அதற்கும் அனுமதி வாங்க வேண்டும். அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள இந்த பகுதிகள் பசுமை போர்த்திய அழகை காண இரண்டு கண்கள் போதாது,. மாஞ்சோலையில் இரவில் தங்க முடியாது.
மாஞ்சோலை வரலாறு: திருவனந்தபுரம் திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் 1700களில் சண்டை ஏற்பட்டது. இதில் எட்டு வீட்டில் பிள்ளைமார்' (எட்டு வீடுகளின் பிரபுக்கள்) என்ற குழுவினர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அவர்களிடம் ஆட்சியை இழந்ததுடன், தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்த காரணத்தால், அப்போது இளவராக இருந்த அரச வாரிசான சேரன் மார்த்தாண்டவர்மன், தனது தாயார் இராணி உமையம்மாவின் பாதுகாப்பில் காட்டுக்குள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
அந்த சமயத்தில், அவர்களுக்கு காட்டின் மறுபகுதியில் அமைந்திருந்த கல்லிடைக்குறிச்சிக்கு அருகே உள்ள சிங்கம்பட்டி' ஜமீன்தாரின் அறிமுகம் கிடைத்தது. இதனால் மார்த்தாண்டவர்மனின் தாயார் ராணி உமையம்மை எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார். இதையடுத்து சிங்கம்பட்டி ஜமீன் உதவியோடு, பெரும்படையுடன் சென்று போரிட்டு, 1730ல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் மார்த்தாண்டவர்மன். அப்போது மார்த்தாண்டவர்மனுக்கு உதவ முயன்ற போது, எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர்நல்லபுலிக்குட்டி மரணம் அடைந்தார்.
சிங்கம்பட்டி எஸ்டேட்: அப்படி இறந்தவருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் திருவிதாங்கூர் மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். அன்றிலிருந்து அந்தப் பகுதியானது சிங்கம்பட்டி எஸ்டேட்' என்று மாறியது. இந்நிலையில் சிங்கம்பட்டியின் 32-ஆவது மன்னர், சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கொலை வழக்கில் சிக்கினார். வழக்கிற்கு நிறைய செலவானதால், அதை சமாளிக்க மலை நாட்டில் பரிசாக தங்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி.) என்ற நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார்.
இதனை வாங்கிய பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம், மணிமுத்தாறு, காரையாறு மற்றும் பாபநாசம் அணைப்பகுதிகளுக்கு மேல் அமைந்திருக்கும் வனப்பகுதியில் 3350 முதல் 4920 அடி வரையிலான உயரத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்டுகளை உருவாக்கியது. அங்கு தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட ஆரம்பித்தது.
சுதந்திர்த்திற்கு பின்னர் ஜாமீன் வசம் இருந்த இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு, அரசு கட்டுப்பாட்டில் வந்தன. ஆனால் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை 100 வருட ஒப்பந்தப்படி நடத்தி வந்த நிலையில், தற்போது குத்தகை காலம் முடிவுக்க வருவதால், அந்த நிறுவனம் வெளியேற போகிறத. இதுஒருபுறம் எனில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி இடம்கூட வாங்க முடியாத அளவிற்கு பாதுகாக்கப்பட்ட இடமாக இருக்கிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என்பதால் இந்த கட்டுப்பாடு இருக்கிறது.
பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் : இதனிடையே பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் எஸ்டேட் பணிகளுக்காகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 'கங்காணிகள்' எனப்படும் தரகர்கள் மூலமாக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வந்து ஈடுபடுத்தி வந்தது. அப்படி அழைத்து வரப்பட்டவர்களின் வாரிசுகள் பலர் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலையிலேயே வசித்து, தேயிலைத் தோட்டங்களில் தற்போது வரையிலும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கூலி குறைவாக வழங்கப்பட்டு வந்தது. 8 மணி வேலை முறை இல்லாமல் இருந்தது. மிக குறைந்த கூலிக்கு வேலை செய்து வந்த தேயிலை தொழிலாளர்கள் கடந்த 1999ல் பொங்கி எழுந்து திருநெல்வேலியில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டம் வரலாற்றில் கருப்பு பக்கமாக இன்று வரை ரத்தக்கரைகளை சுமந்தபடி இருக்கிறது..
என்ன போராட்டம்: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்பினர் தலைமையில் 1999ம் ஆண்டு ஜூலை 23ல் போராட்டம் நடந்தது.
தாமிரபரணியில் மூழ்கி 17 பேர் மரணம்: அப்போது போராட்டத்தை வழி நடத்தி வந்த அரசியல் கட்சித் தலைவர்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவல்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும், மக்களுக்கும் மோதல் ஏற்படவே, போலீசார் திடீரென தடியடி நடத்தினார்கள். காவல்துறையின் கடுமையான தாக்குதலை எதிர்பார்க்காத அப்பாவி மக்கள் , சமாளிப்பதற்காக நிலை குலைந்து சிதறி ஓடினார்கள். ஆனால் ஒருபுறம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சுவர் இருந்தது, மறுபுறம் தாமிரபரணி ஆறு இருந்தது. சுவரி ஏறி தப்பிக்க முடியாத பலர், போலீஸ் அடிக்கு பயந்து தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றனர். இந்த கோர சம்பவத்தால் ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். இதில் 500 பேர் காயம் அடைந்தனர். இந்த நிகழ்வு இன்று வரை தாமிரபரணி படுகொலை என்றே அழைக்கப்படுகிறது.
முடிவுக்கு வரும் மாஞ்சோலை: கடந்த 95 ஆண்டுகளாக தேயிலை தோட்டமாக இருந்த மாஞ்சோலை விரைவில் காப்புக்காடாக மாறப்போகிறது. இதற்கான அடித்தளத்தை தமிழக வனத்துறை தான் போட்டிருக்கிறது. இதற்காக நீண்ட சட்டப்போராட்டம் மற்றும் அழுத்தம் கொடுத்து வந்தது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளை 'காப்புக்காடாக' (Reserve Forest) அறிவித்த அறிவிக்கை வெளியிட்டது தமிழக அரசு. அதனை ரத்து செய்யவேண்டும் என்று பி.பி.டி.சி நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன அந்த வழக்குகளின் தீர்ப்பினை 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
2018ல் என்ன நடந்தது: இதனைத் தொடர்ந்து, கடந்த 28.02.2018 அன்று, எஸ்டேட் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட வனம் 'காப்புக்காடாக' தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு வனச் சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில் நிலுவையிலுள்ள குத்தகைத் தொகை மற்றும் மீதமுள்ள குத்தகை காலத்திற்கான வரிப்பணத்தை முன்கூட்டியே பி.பி.டி.சி நிர்வாகம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் மீதமுள்ள ஆண்டுகள் எஸ்டேட் பகுதியைப் பயன்படுத்தவும், எஸ்டேட் தொடர்ந்து நீடிக்கவும் தடை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்தது.
புலிகள் காப்பகத்தில் 74,000 ஏக்கர் வனப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் மட்டுமே தேயிலைத்தோட்டம் அமைந்துள்ள நிலையில், இந்த தேயிலை தோட்டம் இருப்பது சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து என அறிவித்த வனத்துறை, 'பல்லுயிர்ப் பூங்கா'வை 'காக்காச்சி எஸ்டேட்' பகுதியில் அமைத்திட கடந்த 23.02.2023 அன்று அறிவிக்கை வெளியிட்டது.
முடிவுக்கு வந்தது: இப்படி வனத்துறை தொடர் அழுத்தம் கொடுத்த காரணத்தால், பி.பி.டி.சி நிறுவனம் குத்தகைக் காலம் 2028 வரை இருந்தாலும், இந்தப் பகுதி மீதான தனது கட்டுப்பாட்டினை விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் மாஞ்சோலையில் உள்ள தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக மிகுந்த கவனம் செலுத்தப்படும் அதேநேரம், எஸ்டேட்டில் கூலி வேலை பார்த்துவரும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications